உங்கள் வீட்டில் ஐஸ்வரியம் பெருக சமையலறையை இப்படி வச்சுக்கோங்க..!

சமையலறை என்பது ஒரு வீட்டின் ஆணிவேர் என்று கூறலாம். நம் வீட்டு சமையல் அறையில் ஒரு சில பொருட்களை வைத்தால் நிச்சயம் அன்னம் குறையாது, ஐஸ்வரியத்திற்கும் குறைவிருக்காது அது என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

நம் ஆரோக்கியம் சமையலறையில் தான் துவங்குகிறது, ஒரு குடும்பத்திற்கு  முக்கிய இடம் எனலாம் அங்கு சமைக்கப்படும் உணவுகள் தான் அங்கு வசிக்கும் குடும்பத்தாருக்கு உணர்வாக மாறுகிறது அதன் மூலம்தான் நம் மற்ற வேலைகளை செய்ய முடிகிறது குறிப்பாக நடமாட முடிகிறது அப்படிப்பட்ட சமையலறையை நாம் பூஜை அறைக்கு நிகராக  சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

சமையலறையில் இருக்க இருக்க வேண்டியவைகள்

1.அன்னபூரணியின் படம் நிச்சயம் வைக்க வேண்டும். அன்றாடம் நம் சமையல் வேலையை துவங்கும் முன் அன்னபூரணியை வழிபாடு செய்து பின் துவங்கலாம். இதனால் நம் வீட்டில் அன்ன குறைவு ஏற்படாது. சமைக்கும் உணவும் அமிர்தமாக இருக்கும்.

2.மஞ்சள் எப்போதுமே நிறைய இருக்க வேண்டும்.

3.உப்பு
எந்த உப்பாக இருந்தாலும் அது நிறைவாகத்தான் இருக்க வேண்டும் ஏனெனில் உப்பு மகாலட்சுமிக்கு சமம்

4.நிறைகுடம் தண்ணீர்

தற்போதுள்ள காலங்களில் பல வீடுகளில் குடங்கள் பயன்படுத்துவதில்லை அவ்வாறு இல்லாமல் ஒரு சிறிய குடத்தில் ஆவது தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும்.

5.ஊறுகாய்
குபேரனுக்கு மிகப் பிடித்தது  ஊறுகாய். நீங்கள் சாப்பிட்டாலும் சாப்பிடவில்லை என்றாலும் சமையலறையில் நிச்சயம் ஊறுகாய் இருக்க வேண்டும்.

இந்தப் பொருள்கள் அனைத்தும் ஒரு சமையலறையில் இருந்தால் அந்த இடம் அன்னத்திற்கு குறைவில்லாமலும் மகாலட்சுமி வாசம் செய்வாள் என்றும் கூறப்படுகிறது ஆகவே ஒவ்வொரு வீடுகளிலும் இந்த முறைப்படி கிச்சனை வைத்து ஐஸ்வரியத்தை பெற்று மகிழ்வோம்.

Leave a Comment