புதிய கார் வாங்க போறிங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. உங்களுக்காக இதோ!

ஒரு பக்கம் டெக்னலாஜி என்றால் மறுபக்கம் ஆட்டோமொபைல் துறை வளர்ச்சி பெற்றுக்கொண்டே வருகிறது. அதன்படி, பல்வேறு டெக்னலாஜி மற்றும் சிறப்பு அம்சங்களுடன் புதிய புதிய கார்கள், பைக்கள் என இந்திய சந்தையில் களமிறங்கி புதிய பரிமாணங்களை அடுத்த கட்டத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.

Read More – இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது Husqvarna Svartpilen 250 பைக்!

அந்தவகையில், புதிய கார் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா?, கொஞ்சம் காத்திருங்கள், புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட பல கார் மாடல்கள் வரும் வாரங்களில் இந்திய சந்தைக்கு வருகிறது. எனவே, அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள 4 புதிய கார்களின் சிறப்பு அம்சங்களை குறித்து இங்கே பார்க்கலாம்.

ஹூண்டாய் க்ரெட்டா என் லைன்:

இந்தியாவில் பிரபலமான மிட்-சைஸ் எக்ஸ்யூவி கார்களில் ஹூண்டாய் க்ரெட்டாவின், என் லைன் (Hyundai Creta N Line) மாடலானது புதிய மேம்படுத்தப்பட்ட வடிவத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதன்படி, மார்ச் 11 ஆம் தேதி இந்த மாடல் இந்திய சந்தைக்கு வர உள்ளது. க்ரெட்டா என் லைன் காரானது வழக்கமான க்ரெட்டாவை விட அதிக செயல்திறனை கொண்டு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

க்ரெட்டாவின் என் லைன் கார் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் வரும், இது 158bhp மற்றும் 253Nm டார்க்கை உருவாக்கும் திறன் கொண்டுள்ளது. என் லைன் புதுப்பிக்கப்பட்ட சஸ்பென்ஷன் மற்றும் கிரில், பம்பர்களுடன் மிகவும் கவர்ச்சிகரமான வெளிப்புறத்தை தோற்றத்தை கொண்டிருக்கும். பிற அம்சங்கள் ஏற்கனவே வந்த க்ரெட்டாவைப் போலவே இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

டாடா நெக்ஸான் டார்க் எடிஷன்:

இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் கார்கள் உயர் பாதுகாப்பு அம்சங்களை கொண்ட காராக வளம் வருகிறது. இந்த சூழலில் டாடா மோட்டார்ஸ் இந்தியா தற்போது அதன் 2024 நெக்ஸான் டார்க் எடிஷனை (Tata Nexon Dark Edition) இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. பல்வேறு அம்சங்கள் மற்றும் கவர்ச்சிகரமான வடிவமைப்பை கொண்ட இந்த காரின் அறிமுகம் மார்ச் மாத தொடக்கத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா நெக்ஸான் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு வகைகளில் வருகிறது, மேலும் CNG -யும் விரைவில் வரும் என  எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, நெக்ஸானின் ஆரம்ப விலை ரூ.8.14 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். ஆனால், டார்க் எடிஷன் விலை வழக்கமான மாடல்களை விட ரூ.30,000 அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மஹிந்திரா XUV300 ஃபேஸ்லிஃப்ட்:

ஹூண்டாய் க்ரெட்டா எக்ஸ்யூவி கார்கள் மீது எந்த அளவுக்கு ஈர்ப்பு இருக்கிறதோ, அதையே அளவுக்கு இந்திய சந்தையில் மஹிந்திரா எக்ஸ்யூவி கார்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி, எக்ஸ்யூவி கார்களுக்கு போட்டியாக மஹிந்திரா நிறுவனம் தனது சிறந்த மேம்படுத்தப்பட்ட தயாரிப்பில் உருவாகியுள்ள மஹிந்திரா XUV300 ஃபேஸ்லிஃப்ட் (Mahindra XUV300 Facelift) மாடலை அடுத்த மாதம் அறிமுகம் செய்கிறது.

இதனால், XUV300 மாடல் மக்கள் இடையே அதிக எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. மஹிந்திரா இந்த காருக்கு விரிவான சாலை சோதனைகளை நடத்தி வருகிறது. இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், அடுத்த சில வாரங்களில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

BYD சீல் EV:

சீனாவின் எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான BYD தனது மூன்றாவது தயாரிப்பான BYD Seal EV என்ற மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த சூப்பர் எலெக்ட்ரிக் கார் டெஸ்லா மாடல் 3 உடன் உலக அளவில் போட்டி போடும் என்றும் முழு சார்ஜ் செய்தால் 570 கிமீ தூரம் செல்லும் எனவும் கூறப்படுகிறது. பிரீமியம் மற்றும் ஆடம்பர அம்சங்களுடன், சீல் EV மார்ச் 5ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதே நாளில் விலை விவரங்கள் வெளியாகும், ஆனால் இந்த கார் சுமார் 50 லட்சம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment