Lokesh Kanagaraj : லியோ போஸ்டர்கள் காப்பியா? லோகேஷ் கனகராஜை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

பொதுவாகவே ஒரு திரைப்படத்தில் இருந்து எதாவது போஸ்டர் வெளியானது என்றால் அது இந்த படத்தினுடைய போஸ்டர் காப்பி அடிக்கப்பட்டது என நெட்டிசன்கள் கலாய்ப்பது வழக்கமாக மாறிவிட்டது. அந்த வகையில்,  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்திற்கான போஸ்டர்கள் கடந்த சில நாட்களாகவே வெளியாகி வருகிறது.

இதுவரை தொடர்ச்சியாக மூன்று போஸ்டர்கள் வெளியாகியுள்ள நிலையில், மூன்று போஸ்டர்களும் மற்றோரு படங்களின் போஸ்டர்களுடன் ஒத்துப்போவதாக இரண்டையும் சேர்த்து எடிட் செய்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். குறிப்பாக லியோ படத்தில் இருந்து வெளியான முதல் போஸ்டர் COLD PURSUIT படத்தின் போஸ்டர் இருந்ததில் காப்பி அடிக்கப்பட்டதாக கலாய்த்தனர்.

LEO poster
LEO poster [File Image]

அதனை தொடர்ந்து வெளியான இரண்டாவது போஸ்டர் ஆயுதம் படத்தினுடைய போஸ்டரின் அட்டர் காப்பி எனவும் கலாய்த்தனர். மேலும் சிலர் இந்த போஸ்டர் ரஜினி நடிப்பில் இதற்கு முன்பு வெளியான கபாலி படத்தின் உடைய போஸ்டரின் காப்பி தான் எனவும் தெரிவித்திருந்தனர். அதற்கு விஜய் ரசிகர்கள் துப்பாக்கி படத்தினுடைய காப்பி தான் கபாலி போஸ்டர் எனவும் பதிலடி கொடுத்தனர்.

LEO poster
LEO poster [File Image]

இப்படி தொடர்ச்சியாக லியோ போஸ்டர் அந்த படத்தின் போஸ்டர் உடைய காப்பி என்ன லோகேஷ் இதெல்லாம் என லோகேஷ் கனகராஜையும் சேர்த்து கலாய்த்து வருகிறார்கள். இருப்பினும் வெளியான லியோ போஸ்டர்கள் அனைத்துமே வித்தியாசமாக தான் இருக்கிறது. ஒரு சிலர் வேணுமென்றே கலாய்த்து வருவதால் விஜய் ரசிகர்கள் கோபத்தில் இருக்கிறார்கள்.

மேலும், லியோ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் போஸ்டர்களை தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாடல் அடுத்த வாரம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.