ஜூன் 30ம் தேதி வரை வழக்கறிஞர்கள் கருப்பு கவுன் அணிய தேவையில்லை! ஆனா இது கட்டாயம்!

வழக்கறிஞர் கருப்பு கோட், கழுத்தில் வெள்ளை பட்டை அணிவது கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்ற அறிவிப்பு.

ஜூன் 30ம் தேதி வரை நீதிமன்றங்களில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் கருப்பு கவுன் அணிய தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தில் நீதிமன்றங்களில் விசாரணைக்கு ஆஜராகும் வழக்கறிஞர்கள் கருப்பு கவுன் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை நீதிமன்றங்களில் ஆஜராகும் வழக்கறிஞர் கருப்பு கவுன் அணிய தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு ஆஜராகும் வழக்கறிஞர்கள் கருப்பு கோட் மற்றும் கழுத்தில் வெள்ளை பட்டை அணிய வேண்டும் என்பது கட்டாயம் என கூறப்பட்டுள்ளது. அனைத்து நீதிபதில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை அறிவிப்பாக வெளியிட்டார் தலைமை பதிவாளர் தனபால்.

அதன்படி, உயர்நீதிமன்ற மதுரை கிளை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும். மெட்ராஸ் பார் அசோசியேசன் தரப்பில் மார்ச் முதல் ஜூலை வரை விலக்கு அளிக்க விடுத்த கோரிக்கையை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.