உலக நாடுகளையெல்லாம் அச்சுறுத்தி வரும் கொரோனா (கொவிட்-19) வைரஸ், சீனாவில் கோர தாண்டவமாடி வருகிறது. முதலில் சீனாவில் ஆரம்பித்துப் பரவத் தொடங்கிய, இந்த வைரஸ் இந்தியா, சிங்கப்பூர், அமெரிக்கா என உலகம் முழுக்க 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில், சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் அந்நாட்டை வாட்டிவதைக்கிறது. கொரோனா வைரஸால் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் ஹுபே மாகாணம் முழுவதும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்படுகிறது. மேலும் முகத்தில் அணியும் மாஸ்க்குகள் பற்றாக்குறையால் மக்கள் திண்டாடி வருகிறார்கள். இதைத்தொடர்ந்து சீனாவில் உள்ள நகரங்களில் வைரஸை கட்டுப்படுத்த மருந்துகள் அடிக்கப்பட்டு வருகிறது.
இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. யாரும் யாருடைய வீட்டிற்கும் செல்லக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சீனாவில் கொவிட்-19 வைரசால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வரை பலியின் எண்ணிக்கை 1,665-ஆக உயர்ந்துள்ளது. மேலும், ஒரே நாளில் 142 பேர் பலியாகியுள்ளனர். இந்த வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 68,500-ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்ல புதிதாக 2,009 பேருக்கு இந்த வைரஸ் தாக்கிருப்பது உறுதி செய்யப்பட்டது. இது முந்தைய விட குறைவு என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை: குலசையில் விண்வெளி பூங்கா அமைக்கப்பட உள்ளதற்கான அறிவிப்பை டிட்கோ வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ராக்கெட் ஏவுதளமாக செயல்படும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவை அடுத்து இரண்டாவதாக தூத்துக்குடி மாவட்டம்…
சென்னை: கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், இன்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…
சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. கடந்த சில…
சென்னை : தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் மின் உபயோகமானது குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலானது வாட்டி வதைத்து வந்த…
சென்னை: மக்கள் மறந்த ரேடியோ, தபால் நிலையத்தை நினைவூட்டியவர் பிரதமர் மோடி. - தமிழிசை பேட்டி. புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநரும், தென் சென்னை மக்களவை தொகுதி…
சென்னை : மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.…