Keezh Vaanam Sivakkum: வெளிநாடு மருத்துவர்களை மிரள வைத்த சிவாஜி கணேசன்! இது தான் அங்கீகாரம்…,

இயக்குனர் முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த ‘கீழ் வானம்  சிவக்கும்’ படத்தில் நடிகர்கள் சிவாஜி கணேசன், சரிதா, ஜெய்சங்கர், சரத் பாபு, மேனகா மற்றும் பலரும் நடித்துள்ளனர். குரியகோஸ் ரங்காவின் அதே பெயரில் உள்ள நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த மேடை நாடகத்தின் தழுவல் தான் கீழ் வானம்  சிவக்கும் திரைப்படம். இப்படத்தின் தழுவலுக்கு விசு திரைக்கதை எழுதினார்.

இந்த திரைப்படம் 1981 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆனது. மேலும், திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. இந்நிலையில், தெலுங்கில் கோபால கிருஷ்ணுடு என்றும் மலையாளத்தில் சக்ரவலம் சுவண்ணப்போல் என்றும் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

இது ஒரு பேமிலி ட்ராமாவாக எடுக்கப்பட்டது, இந்த படத்தில் கண் மருத்துவர் துவாரகநாத் என்ற கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசன் நடித்திருப்பார். சினிமா விமர்சகரும் டாக்டருமான கந்தராஜ்  இந்த படம் குறித்து, ஒரு தனியார் சேனல் ஒன்றில் பேசியிருப்பார். இது பற்றி அவர் பேசுகையில், டாக்டர். கந்தராஜிக்கு உலக முழுவதும் நண்பர்கள் உண்டு என்றும், அதில் எத்தியோப்பியா, சுவிட்சர்லாந்த், ஆப்கானிஸ்தான் இந்த மூன்று நாடுகளிலிருந்தும் டாக்டர் பயற்சியில் இருக்கும்பொழுது, சென்னைக்கு ஒரு நாள் வருகை தந்த போது, டாக்டர்.கந்தராஜ் சுற்றி பார்க்க வெளியே கூப்பிட்டு சென்றுள்ளார்.

அப்போது, வெளியே செல்லுகையில் வழி நெடுக தியேட்டர் இருப்பதை பார்த்து அது என்னவென்று தெரியாமல், பெரிய பெரிய கட்டிடமாக இருக்குது அது என்ன? என்று டாக்டர்.கந்தராஜிடம் கேட்க… அதற்கு அவர் அது சினிமா தியேட்டர்  என்று சொல்லுகிறார். அப்போது ஒரு நாள் இவர்கள் மூவரும் படம் பார்க்கவேண்டும் என்று அப்போது ஓடிக்கொண்டிருந்த இந்த கீழ் வானம்  சிவக்கும் படத்தை பார்த்துள்ளனர்.

படத்தை பார்த்துவிட்டு மறுநாள் டாக்டர்.கந்தராஜிடம் வந்து நாங்க ஒரு படம் பார்த்தோம். அதுல டாக்டர் ஆக நடித்த நடிகர் பின்னி பெடல் எடுத்துவிட்டார் என்னமா நடிக்கிறாரு! அப்படினு சொன்னார்களாம். உடனே, என்ன படம் பார்த்தீர்கள் என்று கேட்க… அவர்களும் ‘கீழ் வானம்  சிவக்கும்’படத்தை பார்த்தோம் என்று சொன்னார்கள்.  பின்னர், மூவரும் அந்த நடிகனை பார்க்காமல் போகவே  மாட்டோம் என்று கூற, இவரும் அவர்களை கூட்டிட்டு சிவாஜி கணேசன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஆனால், அப்போது வீட்டில் வாஜி கணேசன்  இல்லை என்றும், அவர் வெளி ஊர் சென்றுள்ளார் என்று சிவாஜி கணேசன் மனைவி கூறியுள்ளார். இப்படி, உலக நாடுகள் மருத்துவர்கள் மிரளும்படி சிவாஜி கணேசன் நடித்திருந்தார். இது தான் உலக போற்றும் நடிப்பு, இத விட சிவாஜிக்கு வேற என்ன வேண்டும். இது தான் சிவாஜிக்கு கிடைத்த அங்கீகாரம் என்று கூறினார். படத்தின் கதைப்படி, சிவாஜி கணேசன் (டாக்டர். துவாரகாநாத்) கோயம்புத்தூரில் உள்ள புகழ்பெற்ற கண் மருத்துவர், கடவுளுக்கு அர்ப்பணிப்புடன் உயர்ந்த ஒழுக்க நிலையும் கொண்டவர்.

அவர் தனது மகிழ்ச்சியான வீட்டை தனது மகன் ஸ்ரீவத்சன், மருமகள் மஞ்சு, இரண்டு உறவினர்கள் மற்றும் விசுவாசமான வேலைக்காரனுடன் பகிர்ந்து கொள்கிறார். மஞ்சுவாக சரிதாவை மருமகளாக பார்க்காமல் தன் மகளாக கருதி அன்பு செலுத்தி வருவார் சிவாஜி. இவர்கள் இருவர் சம்பந்தப்பட்ட குறும்பும், சென்டிமெண்டும் நிறைந்த காட்சிகள்தான் படத்தின் பக்கபலமாக அமைந்தது. கதை சிதறாமல் நகர்ந்து கொண்டிருக்க… துவாரகாநாத்தின் அமைதியான வாழ்க்கை இரட்டைச் சண்டையால் சிதைகிறது.

முதலில் மஞ்சு ஒரு பயங்கரமான கேன்சரைவிட கொடிய நோயால் பாதிக்கப்பட்டு இன்னும் சில மாதங்கள் மட்டுமே வாழ்கிறாள் என்பதைக் அறிந்ததும், பின்னர் தனது சகோதரியின் தற்கொலைக்கு காரணமான அறியப்படாத குற்றவாளியை பழிவாங்கும் பார்வையற்ற குமரன் என்று தெரியவர சிவாஜி இடிந்து போவார். இப்படி, படத்தின் கிளைமாக்ஸ் காட்சியும், சிவாஜி, சரிதாவின் நடிப்பும் படத்தை 100 நாள்கள் ஓட வைத்தன.