இந்தாண்டு முதல் 9ம் வகுப்பு பாட புத்தகத்தில் கலைஞரின் தொண்டுகள் – அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

இந்த கல்வியாண்டு முதல் ஒன்பதாம் வகுப்பு பாடத்திட்டத்தில் கலைஞர் குறித்த பாடம் வருகிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பள்ளிக்கல்வித்துறை மீதான மானிய கோரிக்கை மீதான வருகிறது. அப்போது பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் முதலமைச்சர் கலைஞர்  கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் குறித்து 9 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெறும் என்றும் இந்த ஆண்டு முதல்  கலைஞரின் தொண்டுகள் பாடப்புத்தகத்தில் இடம்பெறும் எனவும் அறிவித்தார்.

தன்னுடைய 86வது வயதில் தமிழ்மொழிக்கு செம்மொழி என்ற தகுதியை பெற்றுத்தந்தவர் கருணாநிதி.  எனவே, கலைஞர் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் குறித்து ஒன்பதாம் வகுப்பு பாட புத்தகத்தில் இடம்பெற உள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Leave a Comment