போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக் அதிரடி கைது.!

Jaffer Sadiq : கடந்த சில வாரங்களுக்கு முன்னர் டெல்லியில், போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனையில் 50 கிலோ அளவுக்கு போதைப்பொருள் சிக்கியது. இந்த போதை பொருள் கடத்தல் வழக்கில் முதற்கட்டமாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Read More – த.வெ.கவில் 15 மணி நேரத்தில் 20 லட்சம் உறுப்பினர்கள் சேர்ப்பு… விஜயின் அடுத்தகட்ட நகர்வு என்ன?

கைது செய்யப்பட்ட 4 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னையை சேர்ந்த, முன்னாள் திமுக பிரமுகரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் இந்த கடத்தலில் முக்கிய நபராக செயல்பட்டதும், அவருக்கு துணையாக அவரது சகோதரர்கள் இருந்ததும், இந்த கடத்தல் கடந்த 3 வருடங்களாக நடைபெற்று வந்ததும் தெரியவந்தது.

இதனை அடுத்து, ஜாபர் சாதிக்கை தேடி டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சென்னை விரைந்தனர். அனால், அதற்குள் ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர்கள் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டனர். இதனால் ஜாபர் சாதிக்கை கண்டுபிடிக்க லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டு, தனிப்படைகள் அமைத்து தேடப்பட்டு வந்தனர்.

Read More – திமுக கூட்டணியில் தொடரும் இழுபறி… காங்கிரஸ் தேசிய தலைவர்கள் சென்னை வருகை.!

இந்நிலையில் தான் தற்போது ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டதாக போதை பொருள் தடுப்பு பிரிவினர் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட அவரை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் விசாரணைக்கு எடுத்து இந்த கடத்தல் குறித்து மேலும் பல்வேறு தகவல்களை விசாரிக்க உள்ளனர்.

Read More – இதுதான் தவெகவின் நிலைப்பாடு… தனது கட்சியின் உறுதிமொழியை அறிவித்தார் ⁦தலைவர் விஜய்!

கடந்த 3 ஆண்டுகளாக ஜாபர் சாதி கும்பல் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜாபர் சாதிக் எங்கு கைது செய்யப்பட்டார் என தகவல் தெரிவிக்காத நிலையில், அவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கைது செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Comment