சூப்பர் ஹிட் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் விஜய் சேதுபதி தான் நடிக்கிறாரா.?

ஓ மை கடவுளே படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஓ மை கடவுளே’. இந்த படத்தில் அசோக் செல்வன், ரித்திகாசிங், வாணிபோஜன், ஷாரா, எம். எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும், விது அயன்னா ஒளிப்பதிவில் லியான் ஜேம்ஸ் இசையமைத்திருந்தார். அதன் பின்னர், நடிகர் விஜய் சேதுபதி கடவுளாகவும், இயக்குநர் கௌதம் மேனன் கெஸ்ட் ரோலிலும் நடித்திருந்தார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மிகப் பெரும் வெற்றியை பெற்றிருந்தது.

இந்த படத்தை தெலுங்கிலும் ரீமேக் செய்ய போவதாக கூறப்பட்டது. அதன் உரிமையை பிவிபி சினிமா கைப்பற்றினர். முதலில் தெலுங்கு ரீமேக்கையும் அஷ்வத் மாரிமுத்து இயக்குவதாக கூறப்பட்டது. ஆனால் இயக்குநர் தருண் பாஸ்கர் இந்த படத்தின் டயலாக்கை எழுதுவதாகவும், அசோக் செல்வன் நடித்த கதாபாத்திரத்தில் விஷ்வக் சென் நடிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது தெலுங்கிலும் விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் அவரே நடிக்க வைக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தெரிய வரும்.