தானம் உயர்ந்ததா ? தர்மம் உயர்ந்ததா ? என சந்தேகமா… அப்போ இந்த பதிவை படிங்க..!

தானம் என்பது வேறு தர்மம் என்பது வேறு அது எவ்வாறு வேறுபடுகிறது என்பது பற்றியும் எது உயர்ந்தது என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தானம்
பலனை எதிர்பார்த்து ஒருவருக்கு கேட்காமலே நாம் செய்வது தானமாகும்.உதாரணமாக இந்த தானம் செய்தால் தனக்கு இவ்வளவு பலன் கிடைக்கும் என அறிந்து செய்வதாகும் .

தர்மம்

தர்மம் என்பது ஒருவர் கேட்டு நாம் உதவி செய்வதும் அதற்கு எந்த ஒரு பலனையும் எதிர்பாராமல் செய்வதும் ஆகும்.அதாவது வலதுகையில் கொடுப்பது இடது கைக்கு தெரியாமல் இருப்பது .விளம்பரம் செய்யாமல் கொடுப்பது .

மனித வாழ்வில் தானம் மிக அவசியமானது அதைவிட தர்மம் மிக மிக அவசியம். தர்மம் செய்த பாவத்தை மீண்டும் செய்ய விடாது புண்ணியத்தை நிலைநாட்டும். நாம் இந்தப் பிறவி எடுத்ததை ஊழ்வினையின் பலன் தான். நாம் செய்த வினைகளை முடிப்பதற்காக இப்பிறவி எடுத்துள்ளோம். எந்த ஒரு தர்மம் செய்தாலும் அதன் பலனை எதிர்பார்க்காமல் செய்தால் அது நமக்கு கவசமாக இருக்கும் என பெரியோர்கள் கூறியுள்ளனர்.

தான தர்மம் பணமாகவோ, உணவாகவோ, உடையாகவோ தான் கொடுக்க வேண்டும் என்று இல்லை. ஆறுதலாக சில வார்த்தைகளைக் கூட தான தர்மமாக கொடுக்கலாம். குறிப்பாக நமக்கும் கீழ் உள்ளவர்கள் கோடி என்ற  வரிகளுக்கு இணங்க நம்மை விட கஷ்டப்படுபவர்கள் உள்ளார்கள், அவர்களுக்கு  நிச்சயம் உதவி செய்ய வேண்டும். அது எந்த உயிராக இருந்தாலும் சரி.

ஆகவே நம் வாழ்வில் பாவம் குறைந்து, புண்ணியம் நிலைத்திருக்க வேண்டும் என்றால் இவை இரண்டுமே செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக தர்மம் செய்ய வேண்டும் ஏனெனில் தர்மம் தலைகாக்கும் நாம் செய்யும் தர்மம் நமக்கு மட்டுமல்லாமல் நம் சந்ததியினரையும் நலமுடன் வாழ செய்யும்.நம் சந்ததியினருக்கு சொத்து, பணம் சேர்த்து வைக்கிறோமோ இல்லையோ தானம் தர்மத்தை சேர்த்து வைப்போம்.தர்மம் தலைகாக்கும்.