அந்த படத்திற்காக விஜயகாந்த் எடுத்த மிகப்பெரிய ரிஸ்க்? குலைநடுங்க வைத்த பிரபலம் சொன்ன கதை!

Vijayakanth கேப்டன் விஜயகாந்த் படங்களில் நடித்து கொண்டிருந்த ஆரம்ப காலத்தில் எல்லாம் ஆக்சன் காட்சிகளில் பெரிய அளவில் டூப் போடாமல் ரிஸ்க் எடுத்து நடிக்கும் விஷயம் பலருக்கும் தெரியும். இதனை அவருடன் படங்களில் பணியாற்றிய ஸ்டண்ட் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் பேட்டிகளில் கூறுவது உண்டு. அந்த வகையில் விஜயகாந்தை வைத்து சில படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சுப்பையா சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜயகாந்த் எடுத்த ரிஸ்க் ஒன்றை பற்றி பேசியுள்ளார்.

read more- விஜயகாந்தின் திறமைய நிறைய பேர் வெளியேகொண்டு வரவேயில்லை! ஹிட் படங்களின் இயக்குனர் வேதனை!

இது குறித்து பேசிய தயாரிப்பாளர் சுப்பையா ” விஜயகாந்த் பெரிதாக அவருடைய படங்களில் டூப் போட்டு நான் பார்த்தது இல்லை. இந்த சமயம் எல்லாம் சண்டை காட்சிகள் எடுக்கும்போது டூப் வைத்து எடுத்தாலே வியர்வையில் 10 சட்டைகளை மாற்றி மாறி போடவேண்டும். ஆனால், அந்த சமயம் எல்லாம் அப்படி இல்லை ஒரு சட்டை ஹீரோவுக்கு மற்றோரு சட்டை டூப் போடுபவருக்கு.

read more- தூங்கட்டும் எழுப்பாதீங்க! கறிசோறு போட்டு கேப்டன் விஜயகாந்த் செய்த செயல்?

விஜயகாந்த் டூப் போட்டு நடிக்கமாட்டார் என்பதால் அவருடைய சட்டை வியர்வை வந்ததும் ஈரம் ஆகிவிடும். பிறகு நான் சட்டையை வாங்கி கொண்டு பிழிந்து காயப்போட்டுக்கொண்டு அவரிடம் திரும்ப கொடுப்பேன்.  அவர் டூப் போடாமலே நடித்துக்கொடுத்துவிட்டு சென்றுவிடுவார் டூப்காக வாங்கிய சட்டை அப்படியே இருக்கும். அந்த அளவிற்கு ரிஸ்க் எடுப்பார். அப்படி தான் காலையும் நீயே மாலையும் நீயே படத்திற்காக அவர் எடுத்த ரிஸ்க் என்னை குலைநடுங்க வைத்தது.

இந்த படத்தின் ஒரு காட்சியை எடுக்கும் போது அவருக்கு மிகவும் காயம் ஏற்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் வில்லனாக நடித்தவர்கள் விஜயகாந்த் துரத்தி சென்று சுடுவது போல ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும் அந்த காட்சியின் போது 140 கிலோ மீட்டர் வேகத்தில் நாங்கள் எடுத்துக் கொண்டிருந்தோம்.  அப்போது எதிர்பாராத விதமாக அந்த போலியான துப்பாக்கியில் இருந்த ஒரு சிறிய குண்டு 140 கிலோ மீட்டர் வேகத்தில் போகும் போது அதனுடைய வேகத்தில் தான் போகும் எனவே அந்த வேகத்தில் விஜயகாந்தின் முகத்தில் பட்டது.

read more- விஜயகாந்தை கோபப்படுத்திய ரவுடிகள்! படப்பிடிப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்?

இதனால் முகத்தில் இருந்த எலும்பு உடைந்து தனியாக சிதறியது. அதனை பார்க்கும்போது என்னுடைய குலைநடுங்கிவிட்டது. பட்டவுடன் என்னுடைய பெயரை கூவிக்கொண்டு விஜயகாந்த் கீழே விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். இப்படியான ரிஸ்க் அவர் பல படங்களிலும் எடுத்து இருக்கிறார்” எனவும் சுப்பையா தெரிவித்துள்ளார்.

Leave a Comment