ஆப்கானிஸ்தானில் விமானம் விபத்து – மத்திய விமான அமைச்சகம் மறுப்பு.!

ஆப்கானிஸ்தானின் வடக்கு படக்ஷான் மாகாணத்தில் இந்திய பயணிகள் விமானம் மலை மீது  விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானம் இந்திய விமானம் கிடையாது என மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் மறுப்பு விபத்துக்குள்ளானது.

மேலும்  இது குறித்த மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தனது எக்ஸ் தள பக்கத்தில், ஆப்கானிஸ்தானின் விபத்துக்குள்ளான விமானம் மொராக்கோ நாட்டைச் சேர்ந்த சிறிய ரக விமானம் என்றும் மேலும் இது குறித்த தகவலுக்கு காத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த சிறிய ரக விமானத்தில் எத்தனை பேர் பயணம் செய்தனர், ஏதேனும் உயிர் சேதம் ஏற்படாத இல்லை என்பது குறித்த தகவலை அந்நாட்டு அரசாங்கம் இன்னும் வெளியடவில்லை.

விடுமுறையை வாபஸ் பெற்றது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை.!

முன்னதாக, இந்த விபத்து குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும், அந்நாட்டு ஊடகமான அமு தொலைக்காட்சியின் முதல் கட்ட தகவலின்படி, மாஸ்கோவுக்குப் பறந்து கொண்டிருந்த இந்திய பயணிகள் விமானம் படக்ஷானின் வாகான் மலை பகுதியில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.