2023 கடைசி நாளில் நிலநடுக்கம்: பதறும் இந்தோனேசியா…சுனாமி ஆபத்து இல்லை!

இந்தோனேசியாவின் அருகே வடக்கு சுமத்ராவில் நேற்று (டிசம்பர் 30) நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியுள்ளது. திடீரென நிலநடுக்கம் ஏற்பட்ட காரணத்தால் மக்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

இந்த நிலையில், இந்த வருடத்தின் கடைசி நாளான இன்று (டிசம்பர் 31) அதிகாலை இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதாவது, பப்புவாவில் 39 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3ஆக பதிவாகியுள்ளது.

இதனால், கட்டடங்கள் குலுங்கியதால், மக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும், ஹவாயில் உள்ள பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையத்தின்படி, இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

நேற்றய தினத்தை தொடர்ந்து, இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். முன்னதாக, நவம்பர் 21 அன்று 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் மேற்கு ஜாவாவின் சியாஞ்சூர் நகரில் குறைந்தது 331 பேர் உயிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தாண்டில் இஸ்ரோ விண்ணில் செலுத்தும் PSLVC – 58 ராக்கெட்..!

கடந்த 2004 ஆம் ஆண்டில், (டிசம்பர் 26)-ஆம் தேதி சுனாமி அலை ஏற்பட்டது. இந்தோனேசியாவின் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இந்த சுனாமி அலை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும், 2018 ஆம் ஆண்டு சுலவேசியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் சுமார் 4,340 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.