பெண்களே….இலவசமாக தையல் மிஷின் வேண்டுமா? அப்போ இத பற்றி தெரிஞ்சிக்கோங்க.!

Sewing Machine: பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ், மத்திய அரசு பெண்களுக்கு இலவச தையல் மிஷின் வழங்குகிறது. இது தொடர்பான செய்திகள் மக்கள் மத்தியில் கடந்த சில நாட்களாலாக பேசப்பட்டு வருகிறது.

அட ஆமாங்க…இந்த இலவச தையல் மிஷின் திட்டத்தை விஸ்வகர்மா யோஜனா என்றும், PM Muft Silai Machine Yojana அல்லது Pradhan Mantri Free Silai Machine Yojana என்றும் அழைக்கப்படுகிறது.

தையல் மிஷின் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ.15000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதன் மூலம் நீங்கள் நீங்கள் தையில் மிஷின் வாங்க முடியும்.

இந்த இலவச தையல் மிஷின் திட்டத்திற்கு விண்ணப்பிக்க https://pmvishwakarma.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும். இலவச தையல் மிஷின் திட்டத்திற்கு தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் பின்வரும் விதிமுறைகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்

  1. ஆதார் அட்டை
  2. வருமான சான்றிதழ்
  3. ஜாதி சான்றிதழ்
  4. வறுமை கோடு குடும்ப அட்டை
  5. வங்கி பாஸ்புக்
  6. பாஸ்போர்ட் அளவு கொண்ட புகைப்படம்

தகுதி

  • 20 முதல் 40 வயதுடைய பெண்களாக வேண்டும்.
  • பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களாக இருக்க வேண்டும்.
  • இந்தியாவின் ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு வேண்டும்.
  • தையல் பற்றிய அடிப்படை அறிவு வேண்டும்.
  • இது போன்ற இலவச திட்டத்தை வேறு எந்த அரசு திட்டத்திலிருந்தும் பெற்றிருக்க கூடாது.

இலவச தையல் மிஷின் திட்டத்திற்கு விண்ணப்பிக்க, உங்கள் விண்ணப்பப் படிவத்துடன் மேலே குறிப்பிட்டுள்ள ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

  1. இலவச தையல் மிஷின் திட்டம் 2024க்கான விண்ணப்பப் படிவத்தை டவுன்லோட் செய்யவும்.
  2. தேவையான விவரங்களை பூர்த்தி செய்துவிட்டு தேவையான ஆவணங்களை சேர்க்கவும்.
  3. விண்ணப்பத்தை ஆன்லைனில் அல்லது அருகிலுள்ள அரசு அலுவலகம்/என்ஜிஓவில் சமர்ப்பிக்கவும்.

ஆஃப்லைன் முறை:

  1. அருகிலுள்ள பொது சேவை மையம் அல்லது கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்று இது பற்றி அறிந்து கொள்ளலாம்.
  2. அங்கு தகவல் அறிந்து கொண்டு விண்ணப்பப் படிவத்தைப் பெற்று நிரப்பவும்.
  3. தேவையான ஆவணங்களின் செராக்ஸ்களை சேர்த்து கொடுக்கவும்.
  4. விண்ணப்பத்தை சமர்ப்பித்துவிட்டு அவர்கள் கொடுக்கும் உறுதிப்படுத்தல் ரசீதைப் பெற்று கொள்ளவும்.

ஆன்லைன் விண்ணப்பங்களை விண்ணப்பித்த பின், உங்கள் விண்ணப்பம் சரி செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்டீர்கள் என்றால், அதற்கான SMS உங்கள் மொபைல் போனுக்கு வந்து சேரும். அதன்பின், ஒப்புதல் கிடைத்த 15 நாட்களுக்குள் வங்கி கணக்கில் உதவித்தொகை வரவு வைக்கப்படும். இதன் மூலம் நீங்கள் தையில் மிஷினை வாங்க முடியும்.