Part-4 வரை வெளியிடுவேன்… திமுகவினர் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை!

தமிழகத்தில் அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலும் 2024-க்குள் வெளியிடப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு.

சென்னையில் உள்ள கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி வரும் நிலையில், ரஃபேல் வாட்ச் பில்லை காட்டினார். நண்பரிடம் ரஃபேல் வாட்ச்சை ரூ.3 லட்சம் கொடுத்து வாங்கியதாக கூறினார். அப்போது பேசிய அவர், காவல் பணியில் இருந்தபோது, லஞ்சப்பணத்தில் ரஃபேல் வாட்ச் வாங்கியதாக திமுகவினர் தகவல் பரப்பினர்.

ரஃபேல் வாட்ச் பில்:

ரஃபேல் வாட்ச் வரிசையில் 147வது வாட்சை நான் வாங்கினேன். எனது வங்கி கணக்கு முதல் சம்பளம் வரை அனைத்தும் விவரங்களையும் வெளியிடுகிறேன். கோவை ஜிம்சன் நிறுவனத்தில் ரஃபேல் வாட்ச்சை வாங்கி கேரளாவின் சேரலாதன் எனக்கு கொடுத்ததாகவும், 2021ம் ஆண்டு மார்ச் மாதம் வாட்ச்சை வாங்கிய சேரலாதன் ராமகிருஷ்ணன் மே மாதம் அதை என்னிடம் கொடுத்தார் எனவும் கூறினார். வீட்டு வாடகை, ஊழியர்கள் சம்பளம், காருக்கு பெட்ரோல் எல்லாவற்றையும் நண்பர்கள் தான் தருகிறார்கள் எனவும் குறிப்பிட்டார்.

சொத்து பட்டியல்:

இதனைத்தொடர்ந்து, திமுகவினர் சொத்து பட்டியலையும் சென்னையில் வெளியிட்டுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. அதன்படி, திமுக குடும்பத்தினர் மற்றும் அக்கட்சியை சேர்ந்தவர்களது சொத்து பட்டியலை வெளியிட்டார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. இந்த சொத்து பட்டியலில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், செந்தில் பாலாஜி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன் டி ஆர் பாலு என பல பெயர் இடம் பெற்றுள்ளது.

அனைத்து கட்சி ஊழல் பட்டியல்:

மேலும், அண்ணாமலை கூறுகையில், தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலும் 2024-க்குள் வெளியிடப்படும். அதிமுக பெயரை குறிப்பிடாமல் இதனை கூறியுள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக எந்த பிரச்சனை வந்தாலும் எதிர்க்க நான் தயார் என்றும் ஊழல் பட்டியலை part-4  வரை வெளியிடுவேன் எனவும் தெரிவித்தார்.

ஊழலை எதிர்த்து பாதயாத்திரை:

மற்ற கட்சிகள் அதில் இடம்பெறும், ஊழலை எதிர்க்க ஆரம்பித்ததால் ஒருகட்சியை மட்டும் எதிர்க்க முடியாது. மொத்தமாக எதிர்க்க வேண்டும். தலைவராக இருக்கும் வரை இப்படி தான் செயல்படுவேன். யார் தயவிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை, மாற்ற நினைத்தால் டெல்லி சென்று என்னை தலைவர் பதவியில் இருந்து மாற்றுங்கள். மேலும், என் மண், என் மக்கள் என்ற பெயரில் ஊழலை எதிர்த்து ஜூலையில் பாதயாத்திரை நடத்தப்படும் எனவும் அறிவித்தார்.

Leave a Comment