எனக்கு நானே இலக்கு… ஏற்றமிகு 7 திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!

யாரையும் இலக்காக கொண்டு நான் செயல்படவில்லை, எனக்கு நானே இலக்கு வைத்து செயல்படுகிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் உரை.

இலவச அரசு பேருந்து:

cm28

சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் திருநங்கைகளுக்கு மாத உதவித்தொகை உயர்வு, மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை பட்டா வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. அப்போது, ஏற்றமிகு ஏழு திட்டங்களின் கீழ் புதிய திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த நிலையில், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஏற்றமிகு ஏழு திட்டங்களின் கீழ் புதிய திட்டங்கள் தொடக்க விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் போது பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தினேன். இலவச அரசு பேருந்து மூலம் இதுவரை 236 கோடி முறை பெண்கள் பயணித்துள்ளனர்.

நான் முதல்வன் திட்டம்:

naanmuthalvan

இலவச பேருந்து பயணம் மூலம் பெண்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவை பெற்றுள்ளனர். இளைஞர்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்றும் வகையில் நான் முதல்வன் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. இலக்கை நோக்கிய பயணத்தில் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறோம். மகளிர் உரிமை தொகை திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் சமூக பாதுகாப்பு திட்டங்கள். தமிழகத்திற்கு ஏராளமான தொழில் முதலீடுகள் வந்துள்ளன.

எனக்கு நானே இலக்கு:

cmmkstalintngovt

ஓராண்டுக்கு காலத்தில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்களால் தமிழகம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி பெற்றுள்ளது. நாளை 70-வது பிறந்தநாள், சுமார் 52 ஆண்டு காலம் அரசியலுக்காக வாழ்க்கையை அர்பணித்துள்ளேன். யாரையும் இலக்காக கொண்டு நான் செயல்படவில்லை, எனக்கு நானே இலக்கு வைத்து செயல்படுகிறேன்.

தினந்தோறும் திட்டம்:

cmmk10

தினந்தோறும் திட்டம் தீட்டுவது தான் எனது பணி. தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக ஆக்கும் திட்டம் சென்னையில் விரைவில் செயல்படுத்தப்படும். அனைத்து குழந்தைகளும் ஊட்டச்சத்து பெற்ற குழந்தைகளாக வளர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. திருநங்கைகளுக்கு நலவாரியம் அமைத்தவர் கலைஞர். மாநிலங்கள் என்பது எல்லைகளால் உருவானது அல்ல, எண்ணங்களால் உருவானது என தெரிவித்தார்.

ஏற்றமிகு ஏழு திட்டங்கள்:

  1. ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ள குழந்தைக்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் தொடக்கம்.
  2. திருநங்கைகளுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
  3. முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் விரிவாக்கம் செய்யப்பட்டது.
  4. தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை தொழில் முனைவோர்களாக்க சிறப்பு திட்டம் தொடக்கம்.
  5. மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்களை முதலமைச்சர் வழங்கினார்.
  6. ரூ.1,136 கோடியில் 44 புதிய மருத்துவமனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
  7. பல்வேறு அரசு பணிகளில் தேர்வானவர்களுக்கு பணி நியாமான அணைகளைய் வழங்கினார் முதலமைச்சர்.

Leave a Comment