உங்கள் ராசிக்கு இன்று எப்படி இருக்கும்? இன்றைய ராசி பலன்கள்.!

மாசி மாதம் 12ஆம் தேதி [பிப்ரவரி 24, 2024] இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம் .

மேஷம்:

உங்கள் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் இன்று  கட்டுப்படுத்த வேண்டும். இன்று சவாலான சூழ்நிலைகளை சந்திக்க நேரும்.  பணிகள் இன்று அதிகமாக காணப்படும் .உங்கள் தடுமாறும் உணர்வை உங்கள் துணை இடத்தில் வெளிப்படுத்துவீர்கள். இன்று தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். தூக்கமின்மை காரணமாக முதுகு வலி ஏற்படும்.

ரிஷபம்:

இன்று உங்களுக்கு சிறப்பான நாள் அல்ல, விட்டுக்கொடுத்து போவதன் மூலம் நற்பலன்களை காணலாம். பணியிடத்தில் இறுக்கமான சூழ்நிலை காணப்படும். உங்கள் துணையுடன் நட்பாக இருக்க வேண்டும். நிதி நிலைமை அதிருப்தி அளிக்கும் . ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மிதுனம்:

இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். பணிகளில் உங்கள் திறமைகளை காட்டுவீர்கள் .உங்கள் துணை இடம் எதிர்மறை விளைவுகளை வெளிப்படுத்துவீர்கள். இன்று எதிர்பாராத வரவுகள் காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கடகம்:

இன்று நீங்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும். அதிக பணிகள் இன்று காணப்படும். உங்கள் துணையுடன் மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தேவையற்ற பண செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தின் கவனம் தேவை அமைதியாக இருப்பது நல்லது.

சிம்மம்:

இன்று மிதமான பலன்களே  கிடைக்கும். மன குழப்பங்கள் ஏற்படலாம். பணிகளை திட்டமிட்டு செயல்பட வேண்டும். உங்கள் துணையுடன் அமைதியை கடைபிடிக்க வேண்டும். கூடுதல் செலவுகள் செய்ய நேரலாம். இன்று கண்கள் விஷயத்தில் பாதுகாப்பாக இருக்கவும்.

கன்னி:

இன்று எதிர்பார்க்கும்  பலன்கள் கிடைக்காது, எந்த ஒரு செயலையும் யோசித்து தொடங்க வேண்டும் .வார்த்தைகளில் கவனம் தேவை .இன்று உங்கள் பணிகளில் ஏமாற்றங்களும் தடைகளும் காணப்படும் .உங்கள் துணையுடன் நல் உறவு காணப்படும். இன்று தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். செரிமான தொந்தரவு ஏற்பட வாய்ப்புள்ளது ,அதனால் தண்ணீர் அதிகம் குடிப்பது நல்லது.

துலாம்:

உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் .பணியில் முன்னேற்றம் காணப்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் துணையுடன் அன்பான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். இன்று நிதி நிலைமை அதிர்ஷ்டகரமாக  உள்ளது. ஆரோக்கியமும் சிறப்பாக உள்ளது.

விருச்சிகம்:

இன்று உங்களுக்கு சாதகமான நாள், முக்கியமான முடிவுகளை எடுப்பது நல்ல பலன் தரும். புதிய  வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் துணை பேசும் வார்த்தைகளை கவனமாக கேட்பது நல்லது. இன்று நிதி நிலைமை முன்னேற்றகரமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது.

தனுசு:

இன்றைய நாளில் நன்மை ,தீமை இரண்டும் கலந்து காணப்படும். சவால்களை பொறுமையுடன் கையாளுவது அவசியம். கவனக்குறைவால் பண இழப்பு நேரலாம்  ,பணியிடத்தில் கவனம் தேவை. உங்கள் துணை இடத்தில் தகவல் பரிமாற்ற பிரச்சனைகள் காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

மகரம்:

இன்று அதிகமாக சிந்தனை வயப்படும் நிலை காணப்படும். தியானம் மேற்கொள்வது நல்லது பணி நிமித்தமாக பயணம் ஏற்படலாம். உங்கள் துணையுடன் பரஸ்பர புரிந்துணர்வு காணப்படும். இன்று நிதி நிலைமை சாதகமாக இருக்காது. செரிமான பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது, சரியான நேரத்தில் உணவு உட்கொள்வது சிறந்தது.

கும்பம்:

இன்று உங்கள் லட்சியங்களை அடைவதற்கு சாதகமான நாள். இன்று உற்சாகமாக பணி செய்வீர்கள். உங்கள் துணையுடன் நட்பாக பழக வேண்டும். உங்கள் கடின உழைப்பின் காரணமாக சலுகைகள் மற்றும் ஊக்கத்தொகை கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது.

மீனம்:

இன்று சுறுசுறுப்பான நாள், உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சக பணியாளர்கள் உதவியாக இருப்பார்கள். உங்கள் துணையுடன் சகஜமான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். இன்று அபரிவிதமான பணப்புழக்கம் காணப்படும் .ஆரோக்கியம் நன்றாக இருக்கிறது.

Leave a Comment