விற்பனைக்கு தயாராகும் ‘Honda Elevate SUV’ கார்..! இன்னும் புக் பண்ணலயா நீங்க..?

ஹோண்டா நிறுவனம் அதன் ஹோண்டா எலிவேட் எஸ்யூவி-யை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்த உள்ளது.

உலக அளவில் முன்னிலையில் வகிக்கும் வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா, அதன் ‘ஹோண்டா எலிவேட் எஸ்யூவி’ (Honda Elevate SUV) காரின் அறிமுகத்தை ஜூன் 6ம் தேதி இந்தியாவில் வெளியிட்டது. இந்த ஹோண்டா எலிவேட்டின் முன்பதிவு ஜூலையில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் முன்பதிவு தொடங்கியது.

Honda Elevate SUV
Honda Elevate SUV [Image Source : Twitter/@ShantonilNag]

இந்த காரை முன்பதிவு செய்வதற்கு ரூ.21,000 செலுத்த வேண்டும். எலிவேட்டை கார் தயாரிப்பாளரின் டீலர்ஷிப்கள் அல்லது அதன் ஆன்லைன் விற்பனை தளம் வழியாக முன்பதிவு செய்யலாம். இந்த ஹோண்டா எலிவேட் செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்த உள்ளது.

Honda Elevate SUV
Honda Elevate SUV [Image Source : Twitter/@ShantonilNag]

அதே மாதத்தில் வாகனத்தின் விநியோகம் இருக்கலாம். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய எஸ்யூவிகளை அறிமுகப்படுத்தும் திட்டம் இருப்பதாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் மின்சார வாகனங்களும் அடங்கும். மேலும் ஹோண்டா எலிவேட்டை அறிமுகப்படுத்தும் முதல் நாடாக இந்தியா இருக்கும் என நிறுவனம் தெரிவித்தது.

எலிவேட் எஸ்யுவி அம்சங்கள்:

எலிவேட் எஸ்யுவி யில் 360 டிகிரி பின்புற கேமரா வசதி, பெரிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், தானியங்கி காலநிலை கட்டுப்பாடு(Temperature control) மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி(Cruise Control) மற்றும் மோதலை குறைக்கும் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை இருப்பதாகக் கூறப்படுகிறது. புதிய ஹோண்டா எலிவேட் 10-இன்ச் பெரிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளேவுடன் பிரீமியம் தோற்றம் கொண்ட கேபின் மற்றும் உட்புறத்தைப் கொண்டுள்ளது.

Honda Elevate SUV
Honda Elevate SUV [Image Source : Twitter/@ShantonilNag]

எலிவேட் எஸ்யுவி எஞ்சின்:

ஹோண்டா எலிவேட் 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் 120 பிஎச்பி ஆற்றலுடன் இயக்கப்படும். இது 145Nm டார்க்கைத் தருகிறது. மெலிதான மற்றும் கூர்மையான LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள் மற்றும் முன்புறத்தில் ஒரு பெரிய கிரில், மல்டி-ஸ்போக் 16 அங்குல டைமண்ட்-கட் அலாய் வீல்களுடன் மற்றும் டாப் மாடல்களில் அடாஸ் (ADAS-Advanced Driver Assistance Systems) எனும் பாதுகாப்பு அம்சங்களுடன் வெளியாக உள்ளது.

Honda Elevate SUV
Honda Elevate SUV [Image Source : Twitter/@ShantonilNag]

எலிவேட் எஸ்யுவி விலை:

இந்தியாவில் ஹோண்டா எலிவேட்டின் எக்ஸ் சோரும் விலை ரூ.10.50 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை இருக்கும் எதிர்பார்க்கப்படும். ஹோண்டா எலிவேட் செர்ரி ரெட் மற்றும் ப்ளூ என இரண்டு வண்ண விருப்பங்களில் வெளியாகியுள்ளது. ஹோண்டா நிறுவனம், ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா போன்ற மாடல்களுக்கு போட்டியாக எலிவேட் எஸ்யூவியை களமிறக்குகிறது.