உயர்நீதிமன்றம் தீர்ப்பு! ஓபிஎஸ் மேல்முறையீடு – நாளை விசாரணை!

சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது நாளை விசாரணை.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 11-ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.

அதிமுக பொதுக்குழு செல்லும்:

இந்த வழக்குகள் தொடர்பாக அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், தற்போது தீர்ப்பும் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம். அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும் என தனி நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

ஓபிஎஸ் மனு தள்ளுபடி:

அதுமட்டுமில்லாமல், அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். இபிஎஸ்-க்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளதால் அவரது தரப்பினர் கொண்டாடி வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வாகுவதும் உறுதியாகிவிட்டது.

ஓபிஎஸ் மேல்முறையீடு:

இந்த நிலையில், கடந்தாண்டு ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ். தரப்பு மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். தனி நீதிபதி குமரேஷ்பாபுவின் தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் இரு நீதிபதிகள் மார்வில் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்துள்ளார். ஓபிஎஸ் மேல்முறையீட்டை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் நாளை விசாரிக்கின்றனர்.

Leave a Comment