பிரபல பாடகிக்கு செவித்திறன் பாதிப்பு! உருக்கமான பதிவு..

Bollywood playback singer Alka Yagnik [File Image]

புகழ்பெற்ற பின்னணி பாடகி அல்கா யாக்னிக், தனக்கு செவி திறன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகைகள் மாதுரி தீட்சித் முதல் ஸ்ரீதேவி வரை பல படங்களுக்கு நூற்றுக்கணக்கான பாடல்களை அமைத்து 90களில் முன்னணியாக வலம்வந்த பாலிவுட் பின்னணிப் பாடகியான அல்கா யாக்னிக், திடீர் வைரஸ் தாக்குதலால் தனக்கு ( Sensory Neural Nerve hearing loss ) ‘அரிய உணர்திறன் நரம்பு செவித்திறன் இழப்பு’ என்கிற அரிய வகை நோய் இருப்பது கண்டறியப்பட்டதாகக் கூறியுள்ளார்.

சில தினங்களுக்கு முன் விமானத்தில் இருந்து இறங்கியபோது காது கேளாமல் போனதாகவும் சோதனையில் இந்நோய் இருப்பது தெரியவந்ததாகவும் அவர் இன்ஸ்டாகிராம் பதிவில், “பாதிப்பிலிருந்து மீள தனக்காக பிரார்த்தனை செய்யும்படியும். அதிக ஒலியுடன் இசை கேட்பது, ஹெட்போன் உபயோகிப்பதிலும் கவனமாக இருக்கும்படியும்” ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியின் முன்னணி இசையமைப்பாளர்கள் பலரது இசையில் பாடிய அல்கா. தமிழில் ஜி.வி.பிரகாஷ் இசையில் ஓரம் போ படத்தில் இது என்ன மாயம் பாடல் பாடினார். கடைசியாக ரஹ்மான் இசையில் சம்கீலா படத்தில் நரம் காலிஜா பாடலைப் பாடியிருந்தார்.