காங்கோவில் பெரும் சோகம்…வெள்ளத்தால் 175க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!

காங்கோவில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 200 -ஐ தாண்டியுள்ளது.

சமீபத்திய நாட்களில் பெய்த கனமழையால் கிழக்கு காங்கோவில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் ஏற்பட்டது. இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை முன்னதாக 175ஆக கூறப்பட்ட நிலையில், தற்போது 200 -ஐ தாண்டியுள்ளது. இதில் வெள்ளத்தால் மட்டும் 175க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என கூறப்படுகிறது. இன்னும் பலரைக் காணவில்லை என்று தெற்கு கிவு மாகாணத்தில் உள்ள உள்ளூர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், இதுவரை 203 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, ஆனால் மற்றவர்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து வருகிறார்கள்.  மேலும், இந்த வெள்ளத்தில் நியாமுகுபி கிராமத்தில் இருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இதுவரை மீட்கப்பட்ட சில உடல்களைச் சுற்றிலும் கிராம மக்கள் கதறி அழுதனர். மேலும், உணவு உடை என எதுவுமே இல்லாத காரணத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீருடன் கலங்கி தவித்து வருகிறார்கள். மேலும், அந்த நாட்டு மக்களுக்கு உதவி செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.