ஆளுநர் விவகாரம் – திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அறிவுறுத்தல்!

ஆளுநருக்கு எதிராக பேனர்கள், போஸ்டர்கள் வைக்கக்கூடாது என்று திமுகவினருக்கு அறிவுறுத்தியதாக தகவல்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் திமுகவின் எம்எல்ஏக்கள் ஆளுநரை தாக்கி பேசக்கூடாது என எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. ஆளுநருக்கு எதிராக பேனர்கள், போஸ்டர்கள் வைக்கக்கூடாது என்றும் திமுகவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment