ஆளுநரின் கருத்து வேதனை அளிக்கிறது – கே.பி.முனுசாமி

உயர்ந்த பதவியில் இருக்கின்ற ஆளுநர், பொது வெளியில் கருத்து சொல்வது அழகு அல்ல என கேபி முனுசாமி பேட்டி.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஆளுநர் ஆர்என் ரவி தெரிவித்த கருத்து வேதனை அளிக்கிறது என அதிமுக துணை பொதுச்செயலாளர் கேபி முனுசாமி தெரிவித்துள்ளார். நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ரவி, நாட்டின் காப்பர் தேவையில் 40 சதவீதத்தை நிறைவேற்றி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர். வெளிநாடுகளில் இருந்து வரும் நிதிகள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளன. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் மக்களை தூண்ட இதுபோன்ற நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது என கூறினார்.

ஆளுநரின் இதுபோன்று பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலர் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஆளுநர் ஆர்என் ரவி தெரிவித்த கருத்து வேதனை அளிக்கிறது என கேபி முனுசாமி கூறியுள்ளார். அவர் கூறுகையில், மக்களின் உணர்வுகளின் அடிப்படைடியில் தான் கடந்த கால ராசுகள் நடவடிக்கை எடுத்திருக்கிறது. உயர்ந்த பதவியில் இருக்கின்ற ஆளுநர், பொது வெளியில் கருத்து சொல்வது அவருக்கு அழகு அல்ல.

பிரதமர் மோடி கடுமையான உழைப்பால் நாட்டு மக்களை காக்க உலக தலைவராக உயர்ந்துள்ளார். அப்படி இருக்கும்போது அந்நிய நாட்டு பணம் இந்தியா வருவதற்கு அனுமதிக்க மாட்டார். சட்டவிரோதமாக வெளிநாட்டு பணம் வந்தாலும் உரிய நடவடிக்கை எடுத்து சிறையிலடைப்பார் பிரதமர் என கூறியுள்ளார்.

Leave a Comment