வார தொடக்க நாளில் குறைந்த தங்கம் விலை! எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதஹலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். அந்த வகையில்,  அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை சரிந்து வருகிறது. அதன்படி, வார தொடக்க நாளான இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது.

(09.10.2023) இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.42,920க்கும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ. 5,365க்கும் விற்பனையாகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து ரூ.75.50 க்கும், கிலோ வெள்ளி ரூ.75,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.