வார தொடக்க நாளில் குறைந்த தங்கம் விலை.! இன்றைய நிலவரம் என்ன?

சரவதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, ​​தங்கத்தின் விலையும் உயர்கிறது.

இவ்வாறு, ஒவ்வொரு நாளும் தங்கம் விலையில் ஏற்றம், இறக்கும் காணப்படுகிறது. அதன்படி, இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம். கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை வார தொடக்க நாளான இன்று ரூ.80 குறைந்துள்ளது.

சென்னையில் (26. 02. 2024) இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,480க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,810க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசுகள் குறைந்து ரூ.76க்கும், கிலோவுக்குரூ. 400 குறைந்து ரூ.76,000 விற்பனையாகிறது.

READ MORE – ரூ. 2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய திமுக பிரமுகர் கட்சியில் இருந்து நிரந்தர நீக்கம்

சென்னையில் (25. 02. 2024) நேற்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.46,560-க்கும், ஒரு கிராம் ரூ.5,820-ஆக விற்பனையானது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், கிராம் வெள்ளி ரூ.76.40க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Comment