ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை! இன்றைய நிலவரம்…

இன்றைய நாள் தங்கம் வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. பணவீக்கம் அதிகரிக்கும் போது, ​​தங்கத்தின் விலையும் உயர்கிறது. இந்தியாவில் தினசரி தங்கத்தின் விலைகள் நாட்டின் பணவீக்க விகிதத்தால் பாதிக்கப்படுகின்றன.

அந்த வகையில், தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு.

கடந்த இரு தினங்களாக உயர்ந்து வந்த நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில், சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது.

சென்னையில் இன்று (03. 02. 2024) சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது ரூ.46,960க்கும், கிராமுக்கு ரூ.20 குறைந்தது ரூ.5,870க்கு விற்பனை ஆகிறது. அதேபோல், ஒருகிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் குறைந்து ரூ.77க்கும், கிலோ வெள்ளி ரூ.77,00க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எந்த தொகுதி.. இன்று பேச்சுவார்த்தை..!

சென்னையில் நேற்றைய தினம் (02. 02. 2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.47,120-க்கும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,890க்கும் விற்பனையானது. அதேபோல், ஒருகிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.78க்கும், கிலோ வெள்ளிரூ.78,000க்கும் விற்பனை செயப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment