தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைவு!

சென்னையில் கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு கிராம் ரூ.5,550க்கும், ஒரு சவரன் ரூ.44,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், ஒரு கிராம் வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ரூ.80-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.