பொருட்கள் வாங்கவில்லை என்றால் ரேஷன் கார்டு ரத்து.? தலைமை அதிகாரி விளக்கம்.!

தமிழகத்தில் 3,4 மாதங்கள் ரேஷன் பொருட்கள் வாங்கவில்லை என்றால் ரேஷன் கார்டு ரத்தாகும் என்பது வதந்தி என உணவுப்பொருள் கூடுதல் தலைமை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

தமிழகத்தில் ரேஷன் கார்டு பயன்பாட்டாளர்கள் மத்தியில் ஒரு பொய்யான வதந்தி ஒன்று வெகு நாட்களாக பரவி இருந்தது. அதற்க்கு நேற்று தமிழ்நாடு நுகர்வோர் உணவு மற்றும் கூட்டுறவுதுறை கூடுதல் தலைமை செயலர் ராதாகிருஷ்ணன் அவர்கள் விளக்கம் அளித்தார்.

நேற்று விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ரேஷன் கார்டு அட்டை ரத்து குறித்த விளக்கத்தை அளித்தார் அவர் கூறுகையில், தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் 3 (அ) 4 மாதங்கள் வரையில் வாங்காமல் இருந்தால் அந்த ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்படும் எனவும், ஆதலால் ஏதேனும் ஒரு பொருளை அவ்வப்போது வாங்கிக்கொள்ள வேண்டும் என நம்பபடுகிறது.

ஆனால், அது உண்மையல்ல. ரேஷன் அட்டை பொருட்கள் வாங்காமல் இருந்தால் ரத்து செய்யப்பட மாட்டது. அது. வெறும் வதந்தி. ரேஷன் கார்டில் குறிப்பிட்ட நபர் குறிப்பிட்ட முகவரியில் இருந்தால் அந்த கார்டு ரத்து செய்யப்பட மாட்டாது. போலி ரேஷன் கார்டுகள் மட்டுமே ரத்து செய்யப்படும். இந்தியாயாவில் மற்ற மாநிலங்களில் மத்திய உணவு பாதுகாப்பு விதிகளின் படி குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே ரேஷன் பொருட்களை வாங்க முடியும். ஆனால், தமிழகத்தில் பெரும்பாலான அனைவரும் ரேஷன் பொருட்கள் வாங்கலாம் என

Leave a Comment