தனியார் பல்கலைக்கழகத்தில் உயிரிழந்த மாணவருக்கு நீதி கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட சக மாணவர்கள் போராட்டம்…!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் கடல் சார் பல்கலைக்கழகத்தில் கடலூரை சேர்ந்த பிரசாந்த் என்ற மாணவன் பயின்று வந்தார். இவர் விடுதியில் தங்கி பயின்று வந்த அவர், நேற்று உடற்பயிற்சியின் போது இரத்த வாந்தி எடுத்தாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியதே அவரது உயிரிழப்பு காரணம் என கூறி சகா மாணவர்கள் கல்லூரிக்கு எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரியின் உடற்பயிற்சி ஆசிரியர் புருஷோத்தமன் கடுமையான உடற்பயிற்சி செய்யுமாறு கட்டாயப்படுத்தியதாகவும், அவர் இரத்த வாந்தி எடுத்தும் கல்லூரி நிர்வாகம் அலட்சியமாக நடந்து கொண்டதாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டினார். மாணவர்களின் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அதன்பின் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டம் கைவிடப்பட்டது.  கல்லூரி நிர்வாகம் மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து கல்லூரிக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவித்தது. மேலும் கல்லூரியின் உடற்பயிற்சி ஆசிரியர் புருஷோத்தமன் பணி நீக்கம் செய்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.