தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம், செம்மொழிப்பூங்கா, அமைக்கப்படும்-பட்ஜெட்டில் அறிவிப்பு.!

தமிழக பட்ஜெட் 2023-24க்கான உரையில் நிதியமைச்சர், செம்மொழிப் பூங்கா, பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்படும் என அறிவித்தார்.

சட்டப்பேரவையில் இன்று தொடங்கி நடந்துவரும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2023-2024 க்கான பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். அவர் தனது பட்ஜெட் உரையில், ஈரோடு மாவட்டத்தில் தந்தை பெரியார் பெயரில் வனவிலங்கு சரணாலயம் புதியதாக அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.

இந்த ‘தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்’ தமிழ்நாட்டின் 18-வது சரணாலயமாக அமைய இருக்கிறது. மேலும் கோவையில் செம்மொழிப்பூங்கா இரண்டு கட்டங்களாக அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அடையாறு ஆற்றின் கரையோரமாக தூய்மைப்படுத்தும் திட்டமாக, கரையோர பொழுதுபோக்கு பூங்காக்கள் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்.

மேலும் மரக்காணத்தில் ரூ.25 கோடி செலவில் பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்.

Leave a Comment