#ELECTIONBREAKING: கர்நாடக தேர்தலில் அதிமுக போட்டி – வேட்பாளரை அறிவித்தார் இபிஎஸ்!

கர்நாடகா மாநிலம் புலிகேசி நகர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக போட்டி என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மே 10-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே போட்டி நிலவி வருகிறது. இந்த சமயத்தில் கர்நாடகா தேர்தல் அதிமுக போட்டியிட வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டது. இந்த நிலையில், கர்நாடக மாநிலம் சட்ட்டப்பேரவை தேர்தலில் அதிமுக போட்டியிடுகிறது என்று அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, மே 10 அன்று நடைபெற உள்ள கர்நாடக மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், பெங்களூரு அருகே உள்ள புலிகேசி நகர் (159) சட்டமன்றத் தொகுதியில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக கர்நாடக மாநில அதிமுக அவைத் தலைவர் டி.அன்பரசன் போட்டியிடுகிறார் என இபிஎஸ் அறிவித்துள்ளார்.

பாஜக கூட்டணியில் போட்டியிட வாய்ப்பு கேட்டதாக தகவல் வெளியான நிலையில், வேட்பாளரை அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. தமிழர்கள் அதிகமுள்ள 10 தொகுதிகளில் குறைந்தது 2 அல்லது 3 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்ட்ட நிலையில், தற்போது ஒரு தொகுதிக்கு வேட்பாளரை அறிவித்துள்ளது அதிமுக. எனவே, கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவை எதிர்த்து அதிமுக போட்டியிடுகிறது.

Leave a Comment