ஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் – நாம் தமிழர் வேட்பாளர் புகார்!

சீமான் பேசியது குறித்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்.

தேர்தல் ஆணையம் நடவடிக்கை:

erodeelectiontn

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. ஒருபக்கம் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், மறுபக்கம் பரிசுப்பொருட்கள் விநியோகம், பணப்பட்டுவாடா தடுப்பு மற்றும் அனுமதியின்றி இயங்கிய தேர்தல் பணிமனைகளுக்கு சீல் வைப்பு, வழக்குப்பதிவு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

நாம் தமிழர் வேட்பாளர் மீது வழக்குப்பதிவு:

அந்தவகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிப்.20ல் ஆலமரத்தெருவில் அனுமதி பெறாமல் தேர்தல் விதியை மீறி பரப்புரை மேற்கொண்ட புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா உட்பட 30 பேர் மீது ஈரோடு தெற்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா புகார் அளித்துள்ளார். தேர்தல் விதிகளை மீறியதாக தனது மீது மட்டும் வழக்கு பதியப்பட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் குற்றசாட்டியுள்ளார்.

தேர்தல் ஆணையம் நோட்டீஸ்:

இதனிடையே, தேர்தல் பரப்புரையில் அருந்ததியின் குறித்து கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது குறித்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாம் தமிழர் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யக்கோரி, சீமானின் தேர்தல் பரப்புரைக்கு தடை விதிக்க கோரியும் சமூகநீதி மக்கள் கட்சி புகார் அளித்துள்ளது.

எனவே, சீமான் பேச்சு தொடர்பாக நாம் தமிளிர் கட்சி வேட்பாளர் மேனகா 24 மணி நேரத்தில் விளக்கம் தர தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தவறினால் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

Leave a Comment