அதிமுக பொதுச்செயலாளராக தேர்வானார் எடப்பாடி பழனிசாமி!

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பு. 

அதிமுக பொதுச்செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். பொதுச்செயலாளர் எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

போட்டியின்றி தேர்வு:

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்திய பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விஸ்வநாதன் அறிவித்துள்ளனர். அதன்படி, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர். இபிஎஸ் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதிமுக தலைமை அலுவலகத்தில், மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார் எடப்பாடி பழனிசாமி.

தொண்டர்கள் கொண்டாட்டம்:

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வெற்றி சான்றிதழ் இபிஎஸ்-யிடம் வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளதை பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி தொண்டர்கள் கொண்டாடடி வருகின்றனர்.

இபிஎஸ் நன்றி:

அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பழனிசாமிக்கு கட்சி நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இதனிடையே, செய்தியாளர் சந்திப்பில் பேசிய எடப்பாடி பழனிசாமி, பொதுச்செயலாளராக என்னை அதிமுக ஒருமனதாக தேர்தெடுத்துள்ளது. என்னை ஒருமனதாக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்த தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நன்றி என்றும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கனவை நிறைவேற்றுவேன் எனவும் தெரிவித்தார்.

Leave a Comment