உங்க வீட்டில் விக்கிரகம் வைத்து வழிபடுகிறீர்களா? அப்ப இந்த பதிவு உங்களுக்கு தான்…!

ஒவ்வொரு வீட்டு பூஜை அறையிலும் படங்கள் வைத்து வழிபடுவது ஒரு முறை, அதைத் தாண்டி விக்ரகங்கள் மற்றும் சிலைகள் வைத்து வழிபடுவதும் ஒரு முறை தான். படங்களை வைத்துக் கொள்வதற்கு அளவு இல்லை ஆனால் விக்ரகங்களை நம் வீட்டில் வைத்து வழிபடுவதற்கு அளவும் சில முறைகளும் உள்ளது அதைப்பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

விக்கிரங்ககளின் வகைகள் 

பொதுவாக விக்கிரகங்கள் இறைத்தன்மையை ஈர்க்கும் ஆற்றலை கொண்டுள்ளது. இது அதன் அளவைப் பொறுத்து மாறுபடும். விக்கிரகங்கள், கருங்கல், பஞ்சலோகம் பித்தளை, தங்கம், செப்பு, வெள்ளி என பல வகைகளில் விக்ரகங்கள் செய்யப்படுகிறது அது மட்டுமில்லாமல் படிகம் ,மரகதம் போன்ற கற்களைக் கொண்டும் செய்யப்படுகிறது .ஆனால் இதை ஒரு அளவுக்கு மேல் வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது.

விக்கிரகதின்  அளவு 

ஆறு அங்குலம் அதாவது அரை அடி உயரம் மட்டுமே வீட்டில் வைத்து வழிபாடு செய்து கொள்ளலாம், அது மட்டுமல்லாமல் அதை முறையாக பராமரித்து அபிஷேகங்கள், அர்ச்சனை, ஆராதனை செய்ய முடியும் என்றால் மட்டுமே வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் வாங்கும் போது உள்ள ஆர்வம் அதை பராமரிபதில்  இருப்பதில்லை.ஒருவேளை உங்கள் முன்னோர்கள் இதை வைத்து காலம் காலமாக வழிபாடு செய்து இருந்தால் அதை யாருக்கும் கொடுக்க முடியாத சூழ்நிலை இருந்தால் முறையாக வழிபாடு செய்து வரவும்.

விநாயகருடைய விக்ரகம் இருந்தால் சதுர்த்தி அன்று கண்டிப்பாக அபிஷேகம் ஆராதனை ஸ்லோகங்கள் படிக்க வேண்டும்.

முருகப்பெருமானாக இருந்தால் சஷ்டி, செவ்வாய், கிருத்திகை, வெள்ளி போன்ற தினங்களில் எது உங்களுக்கு சவுகரியமாக உள்ளதோ அன்று அபிஷேகங்கள் செய்யலாம்.

சிவபெருமானின் லிங்கம் வைத்திருந்தால் நிச்சயம் பிரதோஷம் அன்று வழிபாடு செய்ய வேண்டும். மற்ற தெய்வங்களாக இருந்தால் அந்த தெய்வங்களுக்கு உரிய நாட்களில் வழிபாடு செய்ய வேண்டும்.

நம் வழிபாடு செய்தால் தான் அந்த தெய்வங்களுக்கு உரிய சக்தி, நம் வீட்டில் வழிபடக்கூடிய விக்ரகங்களின் மூலம் நம்  பெற முடியும் .அளவோடு வைத்து வளமோடு வாழ் என்று பெரியோர்கள் சொன்ன பழமொழிக்கிணங்க எதுவாக இருந்தாலும் அதை அளவோடு வைத்துக் கொள்வோம். எனவே விக்கிரகங்களை வாங்குவதற்கு முன் அதற்கான  ஆராதனை, ஸ்லோகம் அபிஷேகம் செய்ய முடியுமா மேலும் அதற்காக ஒரு மணி நேரமாவது ஒதுக்க முடியுமா என யோசனை செய்து விட்டு வாங்கி இந்த முறைகளை கடைபிடித்து வழிபாடு செய்து கொள்ளுங்கள்.