காலில் கருப்பு கயிறு கட்டுவது சரியா?..

இன்று பலரும் கால்களில் கருப்பு கயிறு கட்டுகின்றனர்  இது சரியா மற்றும் முறையாக எவ்வாறு பயன்படுத்துவது என்றும் ஒரு சிலருக்கு கருப்பு நிறம் சேராது என்று கூறுவார்கள் அவர்கள் என்ன செய்வது போன்ற சந்தேகங்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்..

எத்தனை வயதானாலும் இந்த கண் திருஷ்டி சுலபமாக ஒருவரை தாக்கி விடும். இந்த திருஷ்டியை போக்க பல வழிகள் உள்ளது அதில் ஒன்றுதான் இந்த காலில் கருப்பு கயிறு கட்டும் முறை.

கருப்பு கயிறு கட்டுதலின் சரியான முறை

முந்தைய காலங்களில் கருப்பு கயிறு, முடியில் தயார் செய்து கட்டிக்கொண்டனர் இன்றும் பல வீட்டுப் பெண்மணிகள் முடிகளை சேகரித்து இதுபோன்று செய்து வருகின்றனர் குறிப்பாக பூப்படைந்த பெண்களின் காலில் கட்டி விடுவார்கள். சற்றென்று ஒருவர்  பார்க்கும் போது ஏற்படக்கூடிய குரோத எண்ணங்கள் நம்மை தாக்காமல் இருக்கும். ஏனென்றால் நம்மைச் சுற்றி ஓடிக் கொண்டிருக்கும் நல்ல அதிர்வலைகள் எதிராளிகளிகளிடம்  இருந்து வரும் கெட்ட அதிர்வலைகளால் குறைக்கப்படுகிறது. மீண்டும் நம்மை புதுப்பித்துக் கொள்ளத்தான், சுத்திப்போடுவது, திருஷ்டி கழிப்பது, காலில் கயிறு கட்டுதல் போன்றவற்றை நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். இது நமக்கு ஒரு பாதுகாப்பாக இருக்கும். ஆண்கள் என்றால் வலது கால்களிலும் பெண்கள் என்றால் இடது காலிலும் அணிந்து கொள்ளலாம். இதற்கெனவே கயிறுகளும் உள்ளது அதையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

முறையாக பயன்படுத்துவது எப்படி தெரியுமா ?

இதை பயன்படுத்துவதற்கு என்று முறைகளும் உள்ளது. ஐந்து அல்லது ஒன்பது முடிச்சு போடப்பட்டிருக்கும் கயிறுகளை நம் கால்களின் அளவிற்கு ஏற்ப அளந்து கொள்ள வேண்டும். மேலும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலில் பூஜை செய்து கட்டிக் கொள்வது மிகச் சிறப்பு. இல்லை என்றால் வெள்ளி, செவ்வாய், ஞாயிறு போன்ற கிழமைகளில் பைரவர், காளி  போன்ற தெய்வங்களை வழிபாடு செய்தும் கட்டிக் கொள்வது நல்லது .

இதை யார் யார் கட்டிக் கொள்ளலாம்….
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் கட்டிக் கொள்ளலாம் குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் கட்டிக் கொள்ளலாம். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

ஒரு சில குடும்பங்களுக்கு கருப்பு ஒத்துக் கொள்ளாது அதனால்  சிவப்பு கயிறு கட்டலாமா என்று கேட்டால் சிவப்பு கயிறு கட்டினால் எந்த பயனும் இல்லை அதற்கு பதில் இரும்பு தடை போன்று கால் விரலில்  பயன்படுத்தலாம்.

இப்படி கால்களில் கட்டினால் மட்டும் எந்த பிரச்சனையும் வராதா.. என நீங்கள் நினைப்பீர்கள் அப்படி இல்லை .இது ஒரு சிலரின் நம்பிக்கை. இந்த நம்பிக்கை ஒவ்வொருவருக்கும் மாறும். நம்பிக்கையை எதில் வைக்கிறோமோ அதை இருக்க பிடித்துக் கொண்டு அதன் மூலம் தான்  தங்களின் எல்லா நன்மையும் நடக்கிறது என்று ஒரு நல்ல விஷயத்தை வாழ்க்கை முழுவதும் எடுத்துச்செல்வார்கள் ,  அதனால் தான் நம் முன்னோர்கள் ஒரு சில விஷயங்களை அறிவியல் ரீதியாகவும் சொல்லுகின்றனர் ஆகவே இந்தக் கருப்பு என்பது திருஷ்டியை நீக்க கூடியது என்பதில் எந்த மாற்றமும் கிடையாது.