DMK – VCK : திமுக தங்கள் தேர்தல் வாக்குறுதிகளை முழுதாக நிறைவேற்றும்.!  திருமாவளவன் நம்பிக்கை.! 

இன்று சென்னையில் ராமசாமி படையாட்சியாரின் 106வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தொல்.திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  அதன் பிறகு செய்தியாளர்களின் பேசுகையில், திமுக தேர்தல் அறிக்கையில் குற்பிப்பிட்ட திட்டங்களை நிறைவேற்றி வருகிறதா என்பது பற்றி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் கூறிய விசிக தலைவர் திருமாவளவன், திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய ஒவ்வொரு திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறது. நேற்று அறிவித்த கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் இந்தியாவுக்கே முன்னோடியான திட்டம்.

திமுக அறிவிப்பை பார்த்து, காங்கிரசும் தனது தேர்தல் அறிக்கையில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலின் போது அறிவித்து அதனை செய்லபடுத்தி வருகிறார்கள். அதே போல தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு திட்டத்தை முன்னுதாரணமாக கொண்டு தெலுங்கானா அரசு தற்போது அதனை செயல்படுத்த துவங்கியுள்ளது என்றும், திமுக அடுத்தும் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது என திருமாவளவன் தெரிவித்தார்.

அடுத்து இந்தியா கூட்டணி குறித்தும் சனாதனம் குறித்தும் பேசுகையில், இந்தியா கூட்டணி உருவானது முதலே பிரதமர் வரை பதற்றமடைந்துள்ளனர். அதனால் தான் சனாதன விவகாரத்தில் இந்தியா கூட்டணியை எதோ இந்துக்களுக்கு எதிரான கூட்டணி போல காட்சிப்படுத்த முயல்கின்றனர்.

சனாதனம் என்பது காலம் காலமாக எதிர்க்கப்பட்டு வருகிறது. சனாதனம் என்பது இங்கே ஒரு புரிதலும் , வடக்கில் ஒரு புரிதலும் இருக்கிறது. அதனை தான் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கே.சி.வேணுகோபால் குறிப்பிட்டு கூறினார். ஒவ்வொருவருக்கும் அவர்கள் பார்வையில் ஒவ்வொரு கருத்து இருக்கும் என குறிப்பிட்டுள்ளார் என விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.