ட்வீட் டெக் எடுக்கவில்லையா.? காரணம் இதுதான்..புதிய கட்டுப்பாடு விதித்து அதிர்சி கொடுத்த மஸ்க்.!!

ட்விட்டரை போலவே பயனர்கள் பலரும் ட்வீட் டெக்கை  உபயோகம் செய்து  வருகின்றனர். இந்த ட்வீட் டெக்கின் மூலம் பல கணக்குகளின் போஸ்ட்களை ஒரே திரையில் பார்க்க முடியும். இந்த அம்சம்இதில்  உள்ளதால் இதனை பலரும் பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில்,  கடந்த சில நாட்களாகவே ட்வீட் டெக் சரியாக இயங்காமல் இருந்தது. இதனால் பயனர்கள் பலரும் இதற்கு என்ன காரணம்..? என கேள்வி எழுப்பி  வந்தனர். இதனையடுத்து, அதற்கு காரணமும் புதிய கட்டுப்பாடு ஒன்றையும் ட்விட்டரின் உரிமையாளர் எலான் மஸ்க் விதித்துள்ளார்.

அதன்படி, இனிமேல் ட்விட்டரின் ட்வீட் டெக்கை பயன்படுத்த, பயனாளர்கள் 30 நாட்களுக்குள் தங்கள் கணக்கிற்கு அங்கீகாரம் (Verified Account) பெற்றிருக்க வேண்டும் அப்படி பெற்றிருந்தால் மட்டும் தான் நீங்கள் ட்வீட் டெக்கை  பயன்படுத்த முடியும் என எலான் மஸ்க் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளார். இதனால் பயனர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும்,ஏற்கனவே, முன்னதாக எலான் மஸ்க் டிவிட்டரில் ப்ளூ டிக் வைத்திருப்பவர்கள் ஒருநாளைக்கு  8,000 டிவிட்கள் ப்ளூ டிக் இல்லாதவதர்கள்  800 டிவிட்கள் ,  புதியதாக ப்ளூ டிக் வாங்கினால் அவர்கள் 400 டிவிட்களை பார்த்து கொள்ளலாம் என அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.