மேஷ ராசி அன்பர்களே ! நீங்கள் செல்ல வேண்டிய கோவில் எது தெரியுமா?

ராசிகளின் முதல் ராசியாக திகழும் மேஷ ராசி அன்பர்களே   நீங்கள் எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் என்பது பற்றியும் மேஷ ராசியில்  உள்ள நட்சத்திரக்காரர்கள் எங்கு சென்றால்  சிறப்பு என்பதை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

மேஷ ராசியின் தனித்துவம் 

பொதுவாக மேஷ ராசிக்காரர்கள் நினைத்ததை உடனே செய்ய வேண்டும் என்ற துடிப்போடு செயல்படுபவர்கள்.  கிரகிக்கும் தன்மையும், கற்றுக் கொள்ளும் வேகமும் ,இவர்களிடத்தில் அதிகமாக இருக்கும். ஆனால் இவர்களுக்குப் பிடித்த விஷயத்தை செய்தால் அவர்களை சற்று நம்பி ஏமாற கூடியவர்கள்.

மேஷ ராசி செவ்வாயின் ஆதிக்கம் பெற்ற ராசியாகும். இந்தச் செவ்வாயின் அதிபதியாக திகழ்பவர் முருகப்பெருமான். இந்தச் செவ்வாய் வீடு பூமிக்காரராக  திகழ்வதால் நிலம் வாங்கும் யோகம் பெற்றவர்களாக இருப்பார்கள்.

மேஷ ராசிக்காரர்கள் செல்ல வேண்டிய கோவில்

மேஷ ராசி ,மலையும் மலை சார்ந்த இடத்தையும் குறிக்கும். இவர்கள் தங்கள் ராசிநாதரை தரிசிக்கும் போது  வாழ்வு மலை  போல உயரும். மலை மேல் உள்ள முருகரை வழிபாடு செய்யலாம் குறிப்பாக பழனி தண்டாயுதபாணியை வழிபாடு செய்யலாம். இங்கு ஒவ்வொரு முறை சென்று வந்தாலும் வாழ்வில் நல்ல மாற்றம் இருக்கும்.

மேலும் திருவிடைக்கழி முருகரையும் வழிபாடு செய்யலாம். இக்கோவிலுக்கு சீர்காழி மற்றும் காரைக்கால் வழியாக செல்ல வேண்டும். இங்கு சென்று வந்தால் மேஷ ராசிக்காரர்களின் விடை தெரியாமல் இருக்கும் கேள்விகளுக்குக் கூட விடை கிடைத்து விடும். மேஷ ராசி பெண்களுக்கு  செவ்வாயால்  ஏற்படும் கெடு பலன்களையும் நீக்கும்.

மேஷ ராசி நட்சத்திரக்காரர்களுக்கான கோவில்

மேஷ ராசி அஸ்வினி ,பரணி, கிருத்திகை 1ம்  பாதம் போன்ற நட்சத்திரத்தை உள்ளடக்கியது.

அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் ஜீவசமாதி வழிபாடு செய்யலாம் மற்றும் திருச்செந்தூர் முருகனை தரிசிக்கலாம்.

பரணி நட்சத்திரக்காரர்கள் அழகர் மலை கள்ளழகரை தரிசனம் செய்தால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.

கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் நாகப்பட்டினம் சிக்கல் சிங்காரவேலனை  வழிபாடு செய்யலாம்.

மேஷ ராசிக்காரர்கள் மற்ற   கோவிலுக்கும் சென்றாலும்  இந்த குறிப்பிட்ட திருத்தலங்களுக்கு சென்று வந்தால் நிச்சயம் அவர்கள் வாழ்க்கை உயர்வு ஏற்படும். நம்புங்கள் நற்பலனை பெறுவீர்கள்.

Leave a Comment