வாரிசுக்கு முன்பே வெளியாகும் துணிவு..? வெளியான சூப்பர் தகவல்.!

நடிகர் அஜித் நடித்துள்ள ‘துணிவு’ திரைப்படமும், விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படமும் வரும் ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கிட்டத்தட்ட 9-ஆண்டுகள் கழித்து அஜித் விஜய் படங்கள் ஒரே தினத்தில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பதால் இரண்டு படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது.

Pongal 2023 Varisu Vs thunivu
Pongal 2023 Varisu Vs thunivu [Image Source: Twitter ]

இரண்டு படங்களுக்கான டிக்கெட்காண முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. துணிவு படத்திற்கு அதிகாலை 1.00 மணி காட்சியும், விஜய்யின் வாரிசு படத்திற்கு அதிகாலை 4.00 மணிக்கும் முதல் நாள் முதல்காட்சி கொடுக்கப்பட்டுள்ளது.

Thunivu Vs Varisu Pongal
Thunivu Vs Varisu Pongal [Image Source: Twitter ]

இரண்டு படங்களும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், தெலுங்கில் வாரிசு திரைப்படத்திற்கு முன்பே துணிவு படம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. அதன்படி, துணிவு படத்தின் தெலுங்கு டப்பிங்கான ‘தெகிம்பு’ ஜனவரி 11-ஆம் தேதி ஆந்திரா, தெலங்கானாவில் வெளியாகிறது.

2023 varisu vs thunivu pongal
2023 varisu vs thunivu pongal [Image Source : Google]

ஆனால், விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் டப்பிங்கான ‘வாரசுடு’ படம் ஜனவரி 14-ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும், பாலகிருஷ்ணாவின் வீர சிம்ம ரெட்டி ஜன.,12 மற்றும் சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment