Today’s Live : வேலையில்லா திண்டாட்டம் பேரணி..! பாஜக மாநிலத் தலைவர் பங்கேற்பு..!

வேலையில்லா திண்டாட்டம் பேரணி :

பாஜக அழைப்பு விடுத்துள்ள வேலையில்லா திண்டாட்டம் பேரணியை முன்னிட்டு காகடியா பல்கலைக்கழகத்தில் இருந்து அம்பேத்கர் மையம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பாஜக மாநிலத் தலைவர் பாண்டி சஞ்சய் அணிவகுப்புக்காக ஹனுமகொண்டாவுக்கு வந்தார்.

15.04.2023 6:15 PM

இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல் :

சூடானின் தெற்கு கார்ட்டூம் நகரில் ராணுவம். துணை ராணுவத்தினர் இடையே ஏற்பட்டுள்ள மோதலில், கடும் துப்பாக்கிச்சூடு, வெடிகுண்டு தாக்குதல் நடந்து வருவதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு, மோதலை அடுத்து சூடானில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், தேவையின்றி யாரும் வெளியே வர வேண்டாம் எனவும் சூடானில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

15.04.2023 5:40 PM

திதி-பதிஜா :

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜியை விமர்சித்தார், ‘திதி-பதிஜா’ குற்றத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒரே வழி பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வருவதுதான். மேலும், “2024ல் எங்களுக்கு 35 இடங்களை கொடுங்கள், தேர்தலுக்கு முன், மம்தா தீதியின் அரசாங்கம் கவிழும்.” என்று கூறினார்.

15.04.2023 4:45 PM

குட்கா ஊழல் புகார் :

தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்க லஞ்சம் பெற்ற விவகாரத்தில் தமிழ்நாடு முன்னாள் டிஜிபி ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதிமுக ஆட்சியில் நடைபெற்ற குட்கா முறைகேடு வழக்கில் சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

15.04.2023 3:45 PM

காங்கிரஸ் போராட்டம் :

ராகுல் தகுதி நீக்கத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினரின் ரயில் மறியல் போராட்டம் நடத்திவருகின்றனர். சென்னை எழும்பூரில் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். அதேபோல் சேலத்தில் 150 பேர், புதுக்கோட்டையில் 200 பேர் என பல இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் பரபரப்புடன் காணப்பட்டது.

15.04.2023 2:00 PM

இணைய சேவைகள் நிறுத்தம் :

ஒடிசாவின் சம்பல்பூரில் மேலும் 48 மணி நேரத்திற்கு இணைய சேவைகள் நிறுத்தப்படும், மேலும் 48 மணி நேரம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடைகள், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். ஊரடங்கு உத்தரவு காலை 8-10 மணி மற்றும் மாலை 3:30 முதல் மாலை 5 மணி வரை தளர்த்தப்படும் என சம்பல்பூர் கலெக்டர் அனன்யா தாஸ் தெரிவித்துள்ளார்.

15.04.2023 1:30 PM

தமிழில் சி.ஆர்.பி.எஃப் தேர்வு:

தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் ஒன்றிய அரசின் ஆயுதப்படை காவலர் தேர்வு நடத்தப்படும் என உள்துறை அமைச்சகம் தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாநில மொழிகளில் தேர்வு நடத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்த நிலையில், அதனை ஏற்று உள்துறை அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

15.04.2023 12:30 PM

ராகுல் காந்தி தகுதிநீக்கம் :

ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் காலை முதல் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், புதுக்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், சென்னை பல்லாவரத்தில் புறநகர் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

15.04.2023 12:00 PM

பேருந்து விபத்து :

மகாராஷ்டிராவின் ராய்காட்டின் கோபோலி பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்ததில் 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

15.04.2023 11:20 AM

அதிமுக சொத்து பட்டியல் :

அதிமுக சொத்து பட்டியலை வெளியிடட்டும். அதை சந்திக்க தயாராக இருக்கிறோம் என ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதிமுக சொத்து பட்டியல் அண்ணாமலை வெளியிடட்டும். அதற்கெல்லாம் பயப்படக் கூடிய ஆட்கள் நாங்கள் இல்லை. மறைமுகமாக மிரட்டும் வேலை எல்லாம் எங்களிடம் நடக்காது. மடியில் கனமில்லை வழியில் பயமில்லை. நாங்கள் தயாராக இருக்கிறோம் என பதிலளித்தார்.

15.04.2023 10:33 AM

அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி:

கோடை காலத்தில், சீராக, எந்த தடங்கலும் இல்லாமல், மின்சாரம் விநியோகம் செய்வதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எந்த விதமான பயமோ அச்சமோ தேவையில்லை, தேவைக்கும் அதிகமான மின்சாரம் நம்மிடம் இருப்பு உள்ளது. தேவை மேலும் அதிகரித்தாலும் அதை சமாளிக்க மின்சார வாரியம் தயார் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி அளித்துள்ளார்.

15.04.2023 9:50 AM

தூத்துக்குடியில் சோகம்:

தூத்துக்குடி மாவட்டம் மேலாத்தூரில் திருமணமான 3வது நாளில் புதுமண தம்பதி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. முத்துமாரி (21) பழனிக்குமார் (30) தம்பதியினர் நேற்று முன்தினம், புதுமணத் தம்பதியர் மேல ஆத்தூரில் உள்ள குடிநீர் வடிகால் வாரியத்திற்கு சொந்தமான நீர்த்தேக்கத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கு செல்ஃபி எடுத்தபோது முத்துமாரி கால் தவறி நீர்தேக்கத்தில் விழுந்துள்ளார். அவரை காப்பாற்ற முயன்ற கணவரும் நீரில் மூழ்கினார். இருவரும் மூச்சுத்தினறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வெகுநேரம் வரை வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து தேடியபோது, அங்குள்ள குளத்தில் இருவரின் உடல்கள் மிதந்துள்ளன.

15.04.2023 8:10 AM

Leave a Comment