தேர்தல் செலவினத்தை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை – தேர்தல் ஆணையம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேர்தல் செலவினத்தை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை அமைத்த தேர்தல் ஆணையம்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செலவினத்தை கண்காணிக்க வருமான வரித்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஈரோடு இடைத்தேர்தல் தேர்தல் செலவினத்தை கண்காணிக்க வருமான வரித்துறை சார்பில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

eccr

தேர்தல் செலவினத்தை கண்காணிக்க வருமான வரி (புலனாய்வு பிரிவு)தலைமை இயக்குனரத்தின் உதவியை தேர்தல் ஆணையம் நாடியுள்ளது. பொதுமக்களிடம் இருந்து புகார்கள் மற்றும் தகவல்களை கட்டுப்பாட்டு அறை பெற்று கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 1800 425 6669 மற்றும் 044-2827 1915 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மூலம் புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Leave a Comment