அன்பு சகோதரர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்.. கேப்டன் விஜயகாந்த் ட்வீட்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வாழ்த்து.

திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை இன்று பிரமாண்டமாக கொண்டாடுகிறார். முதலமைச்சரின் பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், இன்று 70வது பிறந்த நாள் காணும், தமிழக முதல்வர், திமுக தலைவர், அன்பு சகோதரர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து மக்கள் சேவையாற்ற இறைவனை பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Leave a Comment