இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்; சிப்தயாரிப்பாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு.!

இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு உலக சிப் தயாரிப்பாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்ற “செமிகான் இந்தியா மாநாடு 2023” தொடக்கவிழாவில் பேசிய பிரதமர்  மோடி, உலகளாவிய குறைக்கடத்தி(Semi Conductor) தயாரிப்பு நிறுவனங்களுக்கு இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் என அழைப்பு விடுத்து பேசியுள்ளார். முதலில் வருபவர்களுக்கு நன்மை கிடைக்கும் என்றும் வலியறுத்தியுள்ளார்.

நீங்கள் இந்திய மக்களுக்காக சிப் உருவாக்கும் சமுதாயத்தை மேம்படுத்தவேண்டும் என பிரதமர் கூறியுள்ளார். குஜராத்தில் நடைபெற்ற இந்த செமிகான் இந்தியா 2023 மாநாட்டின் மூலம், உலக நாடுகளுக்கு குறைக்கடத்தி (செமிகண்டக்டர்) தொழிற்சாலை உருவாக்க இந்தியா ஒரு நல்ல மூலதனமாகும் என்பதை வெளிப்படுத்துகிறது.

மேலும் எந்த நிறுவனங்கள் இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் இணைந்து சிப் தயாரிக்கும் முயற்சியில், முதலீடு செய்யப் போகிறீர்கள் என கேள்வி எழுப்பி பேசினார், இந்தியா வளர்ச்சி அடைய வேண்டும் என உலகம் விரும்புகிறது என்பதையும் பிரதமர் மோடி தெரிவித்து பேசினார்.