கோவை ;மேற்கு தொடர்ச்சி மலையில் பயங்கர ‘தீ விபத்து’…7-வது நாளாக தியையனைக்க போராட்டம்.!!

ஆலாந்துறை மேற்குதொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டு தீயை அணைக்கும் பணி 7வது நாளாக தொடர்கிறது.

தமிழகத்தின் கோவை மாவட்டம் ஆலாந்துறை வனப்பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி பயங்கர காட்டு தீ ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட இந்த காட்டுத் தீயை அணைக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், தீ மிகவும் வேகமாக பரவி வருவதால் தீயை அனைக்க  வனத்துறையினர் சிரமபட்டு வருகிறார்கள்.

இந்த காட்டு தீயை அணைப்பதற்காக நீலகிரி , பொள்ளாச்சி,உடுமலை,  ஆனைமலை புலிகள் காப்பகம், ஈரோடு, ஆகிய 5 மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட  வனப் பிரிவுகளைச் சேர்ந்த வனத்துறை ஊழியர்கள் இணைந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இருப்பினும் தீயை கட்டுக்குள் கொண்டு வரமுடியாததால், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தென்னக விமானப்படையினர் எம்ஐ-17 வி-5 ஹெலிகாப்டரை சூலூரில் உள்ள விமானப்படை நிலையத்தில் இருந்து காலை அனுப்பி வைத்தனர்.

இந்த நடவடிக்கைக்காக கேரளாவின் அண்டை மாநிலமான பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா அணையில் இருந்து IAF குழு தண்ணீரை எடுத்தது. அதன்படி நேற்று ஹெலிகாப்டர் நேற்று தீயணைப்புப் பகுதிக்கு சென்று தீயை அணைத்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் ஓரளவு தீயை அணைக்க முடிந்துள்ளது. ஆனால், இன்னும் முழுமையாக தீயை அணைக்கமுடியவில்லை. 7வது நாளாக வன துறையினர் தீயை அணிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள். விரைவில் தீயை முழுவதுமாக அணைத்து முடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை ஹெலிகாப்டர் மூலம் 22 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொண்டு, 4 இடங்களில் முழுமையாக தீ அணைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment