சற்று நேரத்தில் சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்!

இன்னும் சற்று நேரத்தில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்.

தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையத்தை திறந்து வைத்தார். ரூ.1,260 கோடி செலவில் சர்வதேச தரத்தில் அழகிய வடிவில் கட்டப்பட்டுள்ள முனையத்தை தொடங்கி வைத்த பின், அங்கிருந்து இருந்து அடையாறு ஐஎன்எஸ்-க்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி.

கடற்படை தளத்தில் இருந்து சென்றால் ரயில் நிலையத்துக்கு காரில் செல்கிறார்.  இந்த நிலையில், இன்னும் சற்று நேரத்தில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ள பிரதமர் மோடி. சென்னையில் இருந்து கோவைக்கு மணிக்கு 80 முதல் 90 கிமீ வேகத்தில் பயணிக்கும் ரயிலின் அதிகபட்சம் வேகம் 160 கிமீ ஆகும்.

490 கிமீ தூரத்தை 5.50 மணி நேரத்தில் வந்தே பாரத் ரயில் சென்றைடையும். சேவையின் முதல் நாளான இன்று பெரம்பூர், அரக்கோணம், ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூரில் நின்று செல்லும் என கூறப்பட்டுள்ளது. பிரதமர் வருகையால் சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave a Comment