இந்த மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சமீப நாட்களாக சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.