தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனையடுத்து, இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று (டிசம்பர் 20)-ஆம் தேதி முதல் வருகின்ற  26-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென் மாவட்டங்களில் அதி கனமழை – தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மேலும் , தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.