வீட்டிலேயே மாம்பழ ஐஸ்கிரீம் செய்யலாமா..? வாங்க எப்படின்னு பாக்கலாம்…!!

கோடை காலம் தொடங்கி விட்டாலே போதும் மக்கள் பலரும் ஐஸ்கிரீம்கள் மற்றும் மாம்பழங்களை விரும்பி சாப்பிடுவது உண்டு. அந்த வகையில், ஒரு சிலர் இரண்டையும் சேர்த்து மாம்பழஐஸ்கிரீம் ஆகவும் சாப்பிடுவது உண்டு. அதாவது  நாங்கள் எதை கூறுகிறோம் என்றால் கடையில் விற்பனை செய்யப்படும் “மாம்பழம் ஐஸ்கிரீம்” தான்.

Mango
Mango [Image source : file image ]

இந்த ஐஸ்கிரீமை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது உண்டு. எனவே, உங்களுடைய குழந்தைகளுக்கு பிடிக்கும் படி, இந்த சுவையான மாம்பழ ஐஸ்கிரீமை நாம் வீட்டிலேயே எப்படி எளிமையாக செய்வது என்பதை பற்றி விவரமாக பார்க்கலாம் வாருங்கள்..

மாம்பழம் ஐஸ்கிரீம் செய்ய தேவையான பொருட்கள் 

Mango ice
Mango ice [Image source : file image ]

சுத்தமான சுவையான மாம்பழங்கள், சர்க்கரை, பால், ஃப்ரெஷ் கிரீம், ஜெர்ரி பலம், பாதாம் பருக்கள், உலர் திராட்சை

செய்முறை 

முதலில் நீங்கள் எடுத்து வைத்துள்ள மாம்பழங்களை நன்றாக கழுவிட்டு பிறகு தோலை எடுத்து சதையை சிறிய சிறிய துண்டாக நறுக்கவும். பிறகு அதில் தேவையான அளவிற்கு பால் மற்றும் தூள் சர்க்கரை, ஃப்ரெஷ் கிரீம்ஆகியவற்றை சேர்ந்து நன்றாக கலக்கவும். நீங்கள் அனைத்தையும் மிக்ஸியில் கூட கலக்கலாம் அல்லது ஹேண்ட் பிளெண்டரைப் பயன்படுத்தலாம்.

Mango ice
Mango ice [Image source : file image ]

ஹேண்ட் பிளெண்டரைப் பயன்படுத்தினால், முதலில் க்ரீமை தனித்தனியாக நன்றாக அடித்து, பின்னர் மீதமுள்ள பொருட்களுடன் கலக்கவும். கிரீமி பேஸ்ட் செய்ய அதை நன்றாக அரைக்கவும். மாவாக (பேஸ்ட) அரைத்துக்கொண்ட பிறகு காற்று புகாத கண்ணாடி பாத்திரத்தில் ஊற்றவும். அல்லது ஒரு கண்ணாடி பாத்திரத்தில் கூட  ஊற்றலாம்.

mango ice cream
mango ice cream [Image source : file image ]

பிறகு, பாத்திரத்தில் ஊற்றி வைத்திருக்கும் அந்த பேஸ்ட்டில் உங்களுக்கு தேவையான அளவிற்கு பாதம் பருப்பு சேர்த்து கொள்ளலாம், அல்லது உலர் திராட்சையும் சேர்த்துக்கொள்ளலாம். உலர் திராட்சையை சிறிது நேரம் வறுத்து எடுத்த கொண்டு கூட போட்டுக்கொள்ளலாம். மேற்கண்ட செய்யமுறைகள் எல்லாம் நீங்கள் செய்துளீர்களா என்பதை பார்த்துக்கொள்ளுங்கள்.

mango ice cream
mango ice cream [Image source : file image ]

பிறகு ஊற்றி வைத்திருக்கும் அந்த பேஸ்ட்டை குளிர்சாதன பெட்டியில் 6-7 மணிநேரம் அல்லது ஒரே இரவில்  உறைய வைக்கவும். பிறகு எடுத்து பார்த்தால் இந்த கோடையில் குளிர்ந்த இனிமையான இயற்கை மாம்பழ ஐஸ்கிரீமை ரெடியாக இருக்கும். பிறகு என்ன..? எடுத்து உங்கள் குடும்பங்களுடன் சந்தோசமாக சாப்பிட்டு மகிழுங்கள்.

கோடை காலத்தில் மாம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

கோடை காலத்தில் நாம் எதற்காக மாம்பழம் சாப்பிடுகிறோம் அதற்கான நன்மை என்னவென்றால் நாம் எப்போதாவது யோசித்தது உண்டா…சிலர் கோடை காலத்தில் மாம்பழங்களை சாப்பிடுவது உடலில் வெப்பத்தை அதிகரிக்கும் என கூறுவார்கள். ஆனால். அதிக அளவில் எடுத்துக்கொண்டால் மட்டுமே தான் அது உடலில் வெப்பத்தை அதிகப்படுத்தும்.

mango ice cream
mango ice cream [Image source : file image ]

எனவே, ஒரு அளவிற்கு மேல் மாம்பழத்தை சாப்பிடாதீர்கள். மேலும், கோடை காலத்தையும் தாண்டி மாம்பழம் சாப்பிடுவதால் நமக்கு பல ஆரோக்கியமான நன்மைகள் கிடைக்கிறது. அது என்னவென்றும் கொஞ்சம் பார்க்கலாம்.

  • நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது
  • சருமத்தின் அழகை மேம்படுத்துகிறது
  • உடல் எடையை குறைக்க உதவுகிறது
  • செரிமானத்திற்கு உதவுகிறது