வீட்டில் மற்றவர்கள் தூங்கும் போது விளக்கேற்றி பூஜை செய்யலாமா?

பலருக்கும் ஏற்படும் சந்தேகங்களில் பூஜை செய்யும் நேரத்தில் நம் வீட்டில் நபர்கள் தூங்குவது சரியா என தோன்றும். ஒரு சிலர் இரவுவேலை செய்துவிட்டு தூங்குவார்கள் இவ்வாறு இருக்கும் போது விளக்கேற்றி வழிபடலாமா.. என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

முந்தைய நாட்களில் நம் வாழ்க்கை இயற்கையை சார்ந்து தான் இருந்தது .பொழுது விடிந்ததும் வேலைக்குச் சென்று பொழுது சாய்ந்ததும் வீட்டிற்கு வந்து விடுவோம் ஆனால் தற்போது மாறி வரும் விஞ்ஞான வளர்ச்சியால் வேலையில் மாற்றமும், கூடவே நம் உடலிலும் மாற்றமும் வந்துவிட்டது இரவு வேலை செய்துவிட்டு பகல் பொழுதில் தூங்குவது என அப்படியே மாறிவிட்டது பலருடைய வாழ்க்கை.

அப்படி வீட்டில் பகலில் தூங்கும்போது வழிபாட்டை நாம் செய்யாமலும் இருந்து விட முடியாது அதே நேரத்தில் இரவு வேலை செய்துவிட்டு காலையில் தூங்குபவரை நம்மால் எழுப்பவும் முடியாது இதனால் வீட்டில் உள்ளவர்களுக்கு மன சஞ்சலமும் கவலையும் ஏற்படும்.

தொழில் என்பது தான் முதல் கடவுள், அதனால் தான் செய்யும் தொழிலே தெய்வம் என்று பெரியோர்கள் கூறுகிறார்கள். வேலை செய்து முடித்தால் அடுத்த நேரம் ஓய்வு நேரம் ஆகத்தான் இருக்க வேண்டும் அதனால்  வழிபாட்டிற்காக தூக்கத்தை கெடுத்துக் கொள்ள வேண்டியது இல்லை ஒரு நாள் என்றால் பரவாயில்லை ஆனால் நாம் தினமும் வழிபடுவதற்கு அவர்களின் தூக்கத்தை கெடுத்து விட முடியாது அல்லவா… ஆகவே அவர்கள் தூங்கிக் கொள்ளலாம் தவறில்லை. வழிபாடு செய்யும் நாம் தாராளமாக விளக்கேற்றி, பூஜை செய்து கொள்ளலாம். ஆனால் ஒன்று மட்டும் கவனிப்போடு இருக்க வேண்டும்

பூஜை அறை தனியாக உள்ளது என்றால் பிரச்சனை இல்லை ஒவ்வொருவரும் ஒவ்வொரு அறையில் படுத்திருப்பார்கள் பூஜை அறையில் நாம் நிம்மதியாக பூஜை செய்து கொள்ளலாம். ஒரு சிலர் வீடுகள் சிறிதாக இருக்கும் ஒரே அறையில் வசிக்கும் நிலை ஏற்பட்டிருக்கும் அவ்வாறு உள்ளவர்கள் வீட்டில் ஒரு புறமாகவோ  அல்லது செல்ப்புகளிலோ தான்  பூஜை அறையை வைத்திருப்பார்கள், அவ்வாறு இருப்பின் பூஜை அறை நேராக படுக்காமல் ஒரு புறமாக படுக்கச் சொல்லிவிட்டு பூஜை செய்யலாம் விளக்கேற்றி வழிபடலாம். இறைவன் நமக்கு தாயும் தந்தையும் போல. நம் வீட்டில் நமது அப்பா அம்மா நம் நிலையை புரிந்து கொண்டு மகிழ்ச்சியோடு ஆசீர்வாதம் செய்வார்கள் அது போல் தான் இறைவனும்  ,இது  ஒரு குற்றமாக இருக்காது.

எனவே மன சங்கடம் இல்லாமல், சந்தோஷமாகவும், தைரியமாகவும் விளக்கேற்றி வழிபாடு செய்து இறைவனின் நல்ஆசியை பெறுங்கள் .