#BREAKING: வி.ஏ.ஓ. கொலை – புதிதாக விசாரணை அதிகாரி நியமனம்!

விஏஓ கொலை வழக்கில் புதிய விசாரணை அதிகாரியாக காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் நியமனம்.

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரியாக தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஸை கொலை வழக்கு தொடர்பாக புதிதாக விசாரணை அதிகாரியாக நியமித்து உத்தரவிட்டார் தென்மண்டல ஐஜி அஸ்ராகார்க்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே, முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் 55 வயதான லூர்து பிரான்சிசை, அலுவலகத்திற்குள் புகுந்து மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதில், படுகாயமடைந்த விஏஓ லூர்து பிரான்சிஸ் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ராம சுப்ரமணியன், மாரிமுத்து ஆகியோரை காவல்துறை கைது செய்தனர். இதன்பின், கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில். புதிய விசாரணை அதிகாரியாக காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.